Case No 57989/2013 3 மின் இணைப்பு வழங்கப்பட்டதற்கான, அடிப்படை ஆவணங்கள் வழங்க உத்தரவு
7. ஐந்தாம் இனத்திற்குப் பதில் வழங்கப்பட்டிருக்கிறது. மின் இணைப்பு எண்களான 1137, 2093, 547 போன்ற எண்களுக்கு யார் யார் பெயரில் மின் இணைப்பு உள்ளன என்ற விவரங்கள் தரப்பட்டிருக்கின்றன. அதே இனத்தில், மேற்சொன்ன நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புக்கு ஆதாரமாக ஆவணங்களின் நகல்களை மனுதாரர் கேட்டிருக்கிறார். பொதுத் தகவல் அலுவலர் அளித்த 16.09.2013 தேதியிட்ட பதிலில், அலுவலக இடமாற்றம் காரணமாக இன்னும் கால அவகாசம் தேவை என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை அந்தத் தகவல்கள் வழங்கப்படவில்லை. எனவே, ஐந்தாம் இனத்தைப் பொறுத்தவரை, மேற்சொன்ன 3 மின் இணைப்புகள் வழங்கப்பட்டதற்கான அடிப்படை ஆவணங்களை இந்த ஆணைக் கிடைக்கப் பெற்ற ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று பொது தகவல் அலுவலருக்கு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
8. ஆறாம் இனத்தைப் பொறுத்தவரை, சர்வே எண்.26ல் உள்ள விவசாய மின் இணைப்பு எண்.376-001-279 என்பது திரு.நவாப் ஜான் பெயரில் இருப்பதாக பொதுத் தகவல் அலுவலர் தன்னுடைய பதிலில் தெரிவித்திருக்கிறார். பொதுத் தகவல் அலுவலர், விசாரணையின்போது, மனுதாரர் தவறுதலாக மின் இணைப்பு எண்.1279 என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கிறார். ஆக, ஆறாம் இனத்தைப் பொறுத்தும் சரியான தகவல் வழங்கப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.
9. இந்நிலையில், இவ்வழக்கில் மேலும் பரிசீலனை செய்ய வேண்டிய அம்சங்கள் ஏதும் இல்லை என்று கருதி இவ்வழக்கு இத்துடன் முடிக்கப்படுகிறது.
Download
Case No 57989/2013 3 மின் இணைப்பு வழங்கப்பட்டதற்கான, அடிப்படை ஆவணங்கள் வழங்க உத்தரவு

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
