கிராம சபை – Grama Sabha என்பது ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் அடிமட்ட  ஜனநாயக நிறுவனமாகும். இந்தியாவில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் தான் கிராம சபை கூட்டம் நடைபெறும்.

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவித்தல், திட்டங்களைத் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் மற்றும் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தல் போன்றவற்றின் மூலம் கிராம பஞ்சாயத்துகள் திறம்பட செயல்படுவதற்கு துடிப்பான கிராம சபை அவசியம். 

  • குடியரசு தினம் அன்று – ஜனவரி 26.
  • உழைப்பாளர் தினம் அன்று – மே 1.
  • சுதந்திர தினம் அன்று – ஆகஸ்டு 15.
  • காந்தி ஜெயந்தி அன்று – அக்டோபர் 02.

கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ளலாம். மற்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒரு பார்வையாளராக கலந்துகொள்ளலாம்.

பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ சுழற்சி முறையில் கிராம சபை கூட்டம் நடைபெறும்.

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர் ஆவார். தலைவர் இல்லாத பட்சத்தில்  துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாத  பட்சத்தில் வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கிராம சபையின் தலைவராக செயல்படலாம்.

கிராம மக்கள் தொகை

500 என்றால் 50 நபர்கள்

501 – 3000 என்றால் 100 நபர்கள்

3001 – 10000 என்றால் 200 நபர்கள்

10000-திற்கு மேல் 300 நபர்கள்

இதில் 1/3 பெண்கள் மற்றும் SC – ST மக்கள் கலந்துகொள்ள வேண்டும்.
G.O. Ms No. 130 RD & PR (C4) Department, Dated 25-09-2006.

முடியவே முடியாது. கிராம பஞ்சாயத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையின் உறுப்பினர் ஆவார்கள். எனவே, அவர்கள் அனைவரும் கிராமசபையில் கலந்துகொள்ள உரிமை படைத்தவர்கள்.
G.O. Ms No. 130 RD & PR (C4) Department, Dated 25-09-2006 என்ற அரசாணையில் குறிப்பிட்டுள்ள குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபை கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

ஒரு பார்வையாளராக கலந்து கொள்ளலாம். கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை.

இல்லை, அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். நாட்டின் பிரதமரோ அல்லது  முதலமைச்சரே வந்தாலும் கிராம சபையில் தரையில்தான் அமரவேண்டும்.

அப்படியான கால வரையறை எதுவும் கிடையாது. எனவே கிராம சபை தீர்மானம் காலாவதியே ஆகாது. ஒருமுறை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சூழலின் தன்மை கருதி விவாதித்து மறுபரிசீலனை செய்தோ, மாற்றம் செய்தோ அல்லது மறுத்தோ வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முந்தைய தீர்மானம் செயல் இழக்கக் கூடும்.

கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் யார் வேண்டுமானாலும்  நிச்சயம் பெற முடியும்.

இல்லை. தகவல் உரிமை சட்டத்தில் பெரும் போது பக்கத்திற்கு ரூபாய் 2 செலுத்த வேண்டும்.

முடியவ முடியாது. கிராம சபை மக்களுக்கான சபை. பஞ்சாயத்துத் தலைவரோ அல்லது அரசு அதிகாரிகளோ மக்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது இதில் மக்களே முதன்மையானவர்கள்.

இந்த வடிவில்தான் இருக்கவேண்டும் என எந்த நிபந்தனையும் இல்லை.  இயல்பான வாக்கியங்களைக் கொண்டே கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம்.

உங்கள் கிராமத்திற்கு சம்மந்தப்பட்ட எந்த ஒரு விசயத்திற்கும், தேவைக்கும் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றலாம்.

சட்ட மன்றம் மற்றும்  நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கும்  உண்டு.

K. குமரேசன்