Case No.SA 8844/2019 பொது மக்கள் குறைதீர்க்கும் நாளில் பட்டா மாற்றம் கோரியும், வருவாய் கோட்டாட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளரிடம் கொடுத்த ரூ.5000/- த்தை திரும்பப் பெற்றுத்தரக் கோரியும் கொடுத்த மனு

மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள 15.04.2019 தேதியிட்ட மனுவில் கோரியுள்ள மாவட்ட ஆட்சியரின் பொது மக்கள் குறைதீர்க்கும் நாளில் அளித்த மனு தொடர்பான  தகவல்களை இனம்வாரியாக, முறையாக மற்றும் முழுமையாக இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 7(6)-ன்கீழ் கட்டணம் ஏதுமின்றி ஒப்புகை அட்டையுடன்கூடிய பதிவஞ்சலில் மேல்முறையீட்டாளருக்கு அனுப்பி, அதனைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையைப் பெற்று, அது குறித்த அறிக்கையை இவ்வாணை கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக்குள் ஆணையத்திற்குச் சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடப்பட்டு, இவ்வழக்கில் இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு செய்து இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

Download

Case No.SA 8844/2019 பொது மக்கள் குறைதீர்க்கும் நாளில் பட்டா மாற்றம் கோரியும், வருவாய் கோட்டாட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளரிடம் கொடுத்த ரூ.5000/- த்தை திரும்பப் பெற்றுத்தரக் கோரியும் கொடுத்த மனு

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்