Case No.SA 9104/19 குளச்சல்போர் நினைவாக எந்த ஆண்டு முதல் விழா நடைப்பெற்று வருகிறது என்பதன் தொடர்பாக தகவல் வழங்க கோரி மனு

3. தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர், 12.06.2019 தேதியிட்ட மனுவில் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 16.09.2019 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
4. இன்றைய விசாரணையில் மனுதாரர் தனக்கு முழுமையான தகவல் வழங்கப்படவில்லை என்று விசாரணையின்போது தெரிவித்தார். இன்றைய விசாரணையில் பொது தகவல் அலுவலர் அவர்களின் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதை ஆணையம் பதிவு செய்து, பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் இவ்வாணை கிடைக்கப்பெற்ற 1 வாரத்திற்குள், மனுதாரர் கோரிய தகவல்களை, பிரிவு 7(6)ன் கீழ், ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவஞ்சல் வாயிலாக வழங்கி, மனுதாரர் அதனை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை அட்டையின் நகலினை, இவ்வாணையத்திற்கு அனுப்பிவைக்க வேண்டுமென்று உத்தரவிட்டு, இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்து தீர்ப்பளிக்கப்படுகிறது.
5. மேற்படி ஆணைக்கிணங்க பொது தகவல் அலுவலர் தகவல் தர தவறும்பட்சத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பிரிவு 20(1) மற்றும் பிரிவு 20(2)ன்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Download

Case No.SA 9104/19 குளச்சல்போர் நினைவாக எந்த ஆண்டு முதல் விழா நடைப்பெற்று வருகிறது என்பதன் தொடர்பாக தகவல் வழங்க கோரி மனு

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்