Case No.SA 33892/2012 சட்டம் பிரிவு 19(8)(b)-ன் கீழ் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.25,000/- வழங்க மாவட்ட ஆட்சியருக்கு ஆணையிடப்படுகிறது
தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 19(8)(b) ன் கீழ் தகவல் கோரியவருக்கு ஏற்பட்ட இழப்பு அல்லது பிற பாதிப்புக்கு பொது அதிகார அமைப்பு இழப்பீடு வழங்க உத்தரவிட ஆணையத்திற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் 4 ஆண்டுகளுக்கு மேலாக காலதாமதம் ஏற்பட்டு மனுதாரர் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடைய மனுவிற்கு உடனடியாக பதில் கொடுத்திருந்தால் அவருடைய கோரிக்கையான கூடுதல் மருத்துவ செலவை திரும்ப பெறுவது குறித்து நீதிமன்றம் மூலமாகவோ, அரசுக்கு மனு செய்தோ நடவடிக்கை எடுக்க மனுதாரருக்கு வசதியாக இருந்திருக்கும். மனுதாரரின் 14.05.2012 தேதியிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுவிற்கும், 19.06.2012 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து எந்தவிதமான பதிலும் தரப்படவில்லை. 20.11.2012 தேதிக்குள் மனுதாரருக்கு தகவல் கொடுக்க இவ்வாணையம் 25.10.2012ல் இட்ட ஆணையும் மதிக்கப்படவில்லை. ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க பதில் பெறப்படவில்லை என்று 08.03.2013 மற்றும் வேறு தேதிகளில் புகார் செய்துள்ளார்.
மனுதாரருக்கு தேவையற்ற இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க இயலாது. மனுதாரர் கோரிய கூடுதல் தொகையான ரூ.25,000/- கிடைக்குமா என்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்தத் தொகை கிடைக்கக்கூடிய வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில்கொண்டு மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.25,000/- (ரூபாய் இருபத்தைந்து ஆயிரம் மட்டும் ) வழங்க மாவட்ட ஆட்சியருக்கு ஆணையிடப்படுகிறது. இந்த தொகை வழங்கியது குறித்து மாவட்ட ஆட்சியர் இவ்வாணையத்திற்கு 31.05.2016 தேதிக்குள் அறிக்கை அனுப்பவேண்டும்.
Download
Case No.SA 33892/2012 சட்டம் பிரிவு 19(8)(b)-ன் கீழ் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.25,000/- வழங்க மாவட்ட ஆட்சியருக்கு ஆணையிடப்படுகிறது

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
