Case No.SA 9282/2022 இலவச ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வேண்டி விண்ணப்பித்தவரிகளின் பெயர் பட்டியல்

இவ்வழக்கு குறித்த இன்றைய விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர், மனுதாரர் சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் கோரியுள்ள தகவல்கள் தங்கள் அலுவலகம் தொடர்புடைய தகவல்கள் அல்ல எனவும், ஊராட்சிய அலுவலகம் தொடர்புடையது எனவும், இதுகுறித்து மனுதாரருக்கு தகவல் 19.04.2022 தேதியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.
(1) பொதுத் தகவல் அலுவலர் வாதம் மற்றும் ஆவணங்களை ஆணையம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதில், மனுதாரர் சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் கோரியுள்ள, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், சாத்தனந்தல் கிராமத்தில் 31.01.2022 வரை இலவச ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வேண்டி விண்ணப்பித்தவரிகளின் பெயர் பட்டியல் உள்ளிட்ட 10 இனங்களில் தகவல்களை வழங்கக் கோரியுள்ளார்.
(2) மேற்படி தகவல்கள்,பொதுத் தகவல் அலுவலரால் எடுத்துரைக்கப்பட்டவாறு, தங்கள் அலுவலகம் தொடர்புடைய தகவல்களாக இல்லாத பட்சத்தில், மனுவானது சட்டப்பிரிவு 6(3)-ன்கீழ் தொடர்புடைய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும். எனவே, பொதுத் தகவல் அலுவலர், இவ்வாணை கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக்குள், மேற்படி தகவல்களை தொடர்புடைய அலுவலகத்தில் சட்டப்பிரிவு 6(3)-ன்கீழ் பெற்று, சட்டப்பிரிவு 2(j)-ன்கீழ், தகவல்களை கட்டணம் ஏதுமின்றி (100 பக்கத்திற்கு மேல் எனில், பக்கத்திற்கு ரூ.2/- வீதம் மனுதாரர் செலுத்தும் பொருட்டு), அலுவலக முத்திரையுடன் கூடிய சான்றொப்பமிட்டு, மனுதாரருக்கு நேரில் அல்லது ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் வழங்கி, அதனை அவர் பெற்று ஏற்பளிப்பு செய்ததற்கான ஒப்புகை அட்டையின் நகலினை இவ்வாணையத்திற்கு அனுப்பிவைக்க பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது.
(3) மேலும், மேற்படி ஆணைக்கிணங்க பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்க தவறும் பட்சத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 20(1) மற்றும் 19(8)(b) 60 ன்கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.

Download

Case No.SA 9282/2022 இலவச ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வேண்டி விண்ணப்பித்தவரிகளின் பெயர் பட்டியல்

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்