Case No.SA 6857/2020 தனது தாத்தாவின் நிலம், வீடு சொத்துக்களின் விவரத்தின் நகல்கள் மற்றும் அந்த சொத்துக்கள் அனைத்தும் யார் பெயரில் மாற்றப்பட்டுள்ளது என்ற விவரங்கள் கோரி மனு
அந்த மனு தமிழ்நாடு தகவல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரப்பெற்ற தேதியின் அடிப்படையில் காலவரிசை பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வைக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல மாதங்கள் ஆகியும் முழுமையான தகவல்கள் வழங்கப்படாத மனுதாரர்களின் மனுக்களின் மீது மாநில தலைமை தகவல் ஆணையர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுத் தகவல் அலுவலர்களுடன் காணொலி காட்சி கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. அத்தகைய கூட்டம் நடத்துவதற்கு முன்பு மேற்குறிப்பிட்ட மனுக்களை பற்றி தெரிவித்து அவற்றின் மீது தீர்வு காண எடுக்கப்படும் நடவடிக்கைகளை துரிதப்படுத்திக் கொள்வது என முடிவு எடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி அவர்களுக்கு 06.11.2020 அன்று ஒரு கடிதம் அனுப்பப்பட்டது அந்த கடிதம் பெறப்பட்டவுடன் இந்த வழக்கிற்கான பொதுத் தகவல் அலுவலர் தாம் ஏற்கனவே மனுதாரருக்கு தமது த.அ.உ.ச.2005/சி.ப.333/2020 நாள் 20.01.2020 தேதியிட்ட கடிதம் மூலமாக மனுதாரரின் கோரிக்கைகளுக்கு அனைத்துத் தகவல்களையும் வழங்கியமைக்கான சான்றாக அவற்றின் நகல்களை ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார். மனுதாரரும் தனது கோரிக்கைகளுக்கான அனைத்துத் தகவல்களையும் பொதுத் தகவல் அலுவலர் வழங்கிவிட்டதாகவும், தாம் மனநிறைவு அடைந்துள்ளதாகவும் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளார். ஆகவே இந்த வழக்கை முற்றாக்கி ஆணையிடப்படுகிறது.
Download
Case No.SA 6857/2020 தனது தாத்தாவின் நிலம், வீடு சொத்துக்களின் விவரத்தின் நகல்கள் மற்றும் அந்த சொத்துக்கள் அனைத்தும் யார் பெயரில் மாற்றப்பட்டுள்ளது என்ற விவரங்கள் கோரி மனு

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
