Case No.SA 8954/2019 மனுதாரர் கோரும் பட்டா மாற்றம் எப்போது நடைபெற்றது. பட்டா மாற்றம் குறித்து அறநிலையத்துறைக்கு தகவல் பெறப்பட்டதா?
அதன்பின்னர் 14.09.2019 தேதியிட்டு பிரிவு 19(3)-ன் கீழ் ஆணையத்திற்கு இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை அனுப்பி, தான் கோரிய தகவல்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேற்சொன்ன இரண்டாம் மேல் முறையீட்டு மனுவின்மீது இவ்வாணையத்தால், 09.07.2020 அன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின்போது பொதுத்தகவல் அலுவலர் தகவல்கள் முழுமையாக வழங்கப்படவில்லை என்று கண்டறியப்பட்டு அவற்றை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க பொதுத்தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது. வழக்கு 27.07.2020க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வழக்கு மீண்டும் 27.07.2020 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பொதுத் தகவல் அலுவலர் மனுதாரர் கோரும் பட்டா மாற்றம் எப்போது நடைபெற்றது. பட்டா மாற்றம் குறித்து அறநிலையத்துறைக்கு தகவல் பெறப்பட்டதா, அவ்வாறு முறைகேடாக பட்டா மாற்றம் நடைபெற்றிருப்பின் அது தொடர்பாக நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்த தகவல்களை மனுதாரருக்கு ஒரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வழக்கு 07.08.2020க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ந.க.7640/2019-2/இ4 நாள்:24.07.2020 என்ற கடிதத்தின் வாயிலாக பொதுத் தகவல் அலுவலர் மனுதாரருக்கு அவர் எழுப்பிய கோரிக்கைகளுக்கு அனைத்துத் தகவல்களையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்து, அதன் நகல்களையும் ஆணையத்திற்கு 30.07,2020 அன்று அனுப்பியுள்ளார். மனுதாரரும் தனது கோரிக்கைகளுக்கு அனைத்துத் தகவல்களையும் பொதுத் தகவல் அலுவலர் வழங்கிவிட்டதாகவும், பெறப்பட்ட தகவல்களில் தான் மனநிறைவு அடைவதாகவும் தெரிவித்தார். ஆகவே வழக்கின் விசாரணையை முற்றாக்கி ஆணையிடப்படுகிறது
Download
Case No.SA 8954/2019 மனுதாரர் கோரும் பட்டா மாற்றம் எப்போது நடைபெற்றது. பட்டா மாற்றம் குறித்து அறநிலையத்துறைக்கு தகவல் பெறப்பட்டதா?

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
