Case No.SA 15252/2015 மனுதாரர் கோரிய தகவல்களை இவ்வாணை 7(6)ன் படி கட்டணமின்றி வழங்கும்படி உத்தரவு

அனைவரும் தவறாது ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது.
11. 02.02.2016 நாளிட்ட ஆணைக்கிணங்க மேற்கண்ட அலுவலர்கள் அனைவரும் ஆஜரானார்கள். திருச்சி மாவட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.தர்ப்பகராஜ் சட்டமன்ற தேர்தல் சம்மந்தமான பணிகள் பார்க்கப்பட்ட வருவதால் இன்றைய விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு 08.03.2016 நாளிட்ட விளக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ்விளக்க அறிக்கையை பொதுத் தகவல் அலுவலரிடம்
கொடுத்தனுப்பியுள்ளார். மாவட்ட வருவாய் அலுவலர் சமர்ப்பித்த விளக்க அறிக்கையை பரிசீலனை செய்து அதனை ஏற்றுக் கொண்டது. எனவே, 17.12.2015 நாளிட்ட ஆணையில் வழங்கப்பட்ட ஆணை எண்.4(1) மற்றும் 4(2)ன்படி பொதுத் தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் சமர்ப்பித்த விளக்க அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்கள் மீது எடுக்கப்படவிருந்த நடவடிக்கையை இவ்வாணையம் கைவிடுகிறது.
12. இன்றைய விசாரணையில் ஆஜரான மனுதாரர் தனக்கு முழுமையான தகவல்கள் வழங்கவில்லை என்று ஆணையத்தில் தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் மனுதாரர் கோரிய 7 இனங்களுக்கான தகவல்களை இவ்வாணை கிடைக்கப் பெற்ற 30 நாட்களுக்குள் சட்டப்பிரிவு 7(6)ன் படி கட்டணமின்றி வழங்கும்படி பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது.
13. வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகிறது.

Download

Case No.SA 15252/2015 மனுதாரர் கோரிய தகவல்களை இவ்வாணை 7(6)ன் படி கட்டணமின்றி வழங்கும்படி உத்தரவு

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்