Case No. SA 9169/2020 கோப்பு ஆவணங்களை பார்க்க அனுமதிக்கவும், ஆவண நகல்கள் வேண்டியும் கோரி மனு

பொதுத் தகவல் அலுவலரின் பதில் கடிதத்தினை பரிசீலனை செய்ததில் மேல்முறையீட்டாளருக்கு முறையான தகவல்கள் வழங்கப்படவில்லையென தெரிய வருகிறது. எனவே, பொதுத் தகவல் அலுவலரின் வாதுரையை ஆணையம் பதிவு செய்தும், மேல்முறையீட்டாளருக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பளித்தும் விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட உத்திரவு பிறப்பிக்கப்படுகின்றது:
இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), விழுப்புரம் மற்றும் தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மரக்காணம் ஆகிய இருவரும் இணைந்து மேல்முறையீட்டாளருக்கு அறிவிப்புக் கடிதமொன்றை அனுப்பி, அலுவலக வேலை நாளில், வேலை நேரத்தில், இதர அலுவலகப் பணிகளுக்குக் குந்தகம் ஏற்படாவண்ணம் அலுவலகம் வரவழைத்து மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள 15.06.2020 தேதியிட்ட மனுவில் குறிப்பிட்டுள்ள M.புதுப்பாக்கம் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரின் பராமரிப்பில் இருக்கின்ற கிராம கணக்குகள், கோப்புகள், ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் கணினி நடவடிக்கைகள், உள்ளிட்டவற்றை மேல்முறையீட்டாளரின் ஆய்வுக்கு சட்டப்பிரிவு 2(j)-ன்படி ஆஜர்படுத்தி, அவர் ஆய்வு செய்வதை வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து, ஆய்வு செய்த பின்னர் அவர் தனக்கு தேவைப்படும் தகவலை குறிப்பிட்டு கோரும்பட்சத்தில் அதனை ஒளிநகலெடுத்து, சான்றொப்பமிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டம்,2005 சட்டப்பிரிவு 7(6)-ன் கீழ் கட்டணமின்றி வழங்கி, அவர் பெற்று ஏற்பளிப்பு செய்த விபரத்தையும், ஆய்வு செய்த காட்சிகள் அடங்கிய CD அல்லது புகைப்படத்தை இணைத்து அறிக்கையாக இவ்வாணை கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக்குள் ஆணையத்திற்கு சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிட்டு, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு செய்து, இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகிறது.

Download

Case No. SA 9169/2020 கோப்பு ஆவணங்களை பார்க்க அனுமதிக்கவும், ஆவண நகல்கள் வேண்டியும் கோரி மனு

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்