Case No. SA 9214/2018 நில உடமை மேம்பாட்டு திட்டத்திற்கு பிற்பட்ட கிராம அ பதிவேடு மற்றும் சிட்டா பதிவேட்டின் ஒளி நகல் கேட்டு மனு

இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் மனுதாரருக்கு 19.02.2019 தேதியிட்ட கடிதத்தின் மூலம் தகவல் வழங்கப்பட்டதாகத் தெரிவித்து அதன் நகலை சார்வு செய்தார். மனுதாரர் தனக்கு UDR க்கு முன்பு உள்ள தகவல்கள் வேண்டும் என்று விசாரணையின்போது தெரிவித்தார். பொதுத்தகவல் அலுவலர் UDR க்கு பின்பு உள்ள தகவல்கள் வழங்கப்பட்டது என்றும், UDR -க்கு முன்பு உள்ள தகவல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளது என்றும், மேற்படி தகவல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பெற்று தருவதாகவும், 13.11.2019 அன்று பொது அதிகார அமைப்பு அலுவலகத்திற்கு வந்து ஆவணங்களைப் பார்வையிட்டு மனுதாரர் தகவல் பெற்றுக் கொள்ளலாம் என்றும் விசாரணையின்போது தெரிவித்தார். மனுதாரரும் தான் பொது அதிகார அமைப்பு அலுவலகத்திற்கு நேரிடையாக சென்று ஆவணங்களைப் பார்வையிட்டு தகவல் பெற்றுக் கொள்வதாக உறுதியளித்தார்.
இன்றைய விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் வழங்கப்படுகின்றன:-
பொது தகவல் அலுவலர் விசாரணையின்போது உறுதியளித்தபடி விடுபட்ட இனங்களுக்கான தகவலை, மனுதாரர் பொது அதிகார அமைப்பு அலுவலகத்திற்கு நேரிடையாக சென்று ஆவணங்களைப் பார்வையிட்டு, தனக்கு தேவையான நகல்களை பெற்றுக் கொள்ள மனுதாரருக்கும், மனுதாரர் கோரும் தகவலை மனுதாரருக்கு நேரிடையாக வழங்கி, மனுதாரர் ஏற்பளிப்பு செய்த ஒப்புகை அட்டையின் நகலை இவ்வாணையத்திற்கு இவ்வாண கிடைக்கப் பெற்ற 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்க பொதுத் தகவல் அலுவலருக்கும் ஆணையம் உத்திரவிடுகிறது.

Download

Case No. SA 9214/2018 நில உடமை மேம்பாட்டு திட்டத்திற்கு பிற்பட்ட கிராம அ பதிவேடு மற்றும் சிட்டா பதிவேட்டின் ஒளி நகல் கேட்டு மனு

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்