Case No SA 4311/2015 பொதுத் தகவல் அலுவலர் சார்பாக அவருக்கு இணையான அலுவலர் யாரும் விசாரணைக்கு ஆஜராகததற்கான காரணம் குறித்து மனு

இவ்வாணையத்தில் இன்று (22.03.2016) நடைபெற்ற விசாரணைக்கு மனுதாரர் திரு.பி. மாரியப்பன் ஆஜரானார். பொது அதிகார அமைப்பின் சார்பாக, தனி வட்டாட்சியர் (ச.பா.தி) அலுவலகம், உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம் அவர்கள் ஆஜராகவில்லை. தமிழ்நாடு தகவல் ஆணையம் (மேல்முறையீடு நடைமுறை) விதிகள் 2012, விதி 8(2)-ன்படி, பொதுத் தகவல் அலுவலர் இவ்வாணையத்தின் விசாரணைக்கு ஆஜராவது கட்டாயம் ஆகும். அழைப்பாணைகள் அனுப்பப்பட்டும் பொதுத் தகவல் அலுவலர் இன்றைய விசாரணைக்கு ஆஜராகவில்லை. பொதுத் தகவல் அலுவலர் சார்பாக அவருக்கு இணையான அலுவலர் யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தான் விசாரணைக்கு ஆஜராகததற்கான எந்தவொரு முகாந்தரமும், எந்தவொரு காரணமும் தெரிவிக்காமல் இன்றைய விசாரணைக்கு ஆஜராக தவறியுள்ளார். பொதுத் தகவல் அலுவலரின் வருகையின்மையை இவ்வாணையம் வண்மையாக கண்டிக்கிறது. பொதுத் தகவல் அலுவலரின் வருகையின்மை பதிவு செய்யப்பட்டது.

Download

Case No SA 4311/2015 பொதுத் தகவல் அலுவலர் சார்பாக அவருக்கு இணையான அலுவலர் யாரும் விசாரணைக்கு ஆஜராகததற்கான காரணம் குறித்து மனு

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்