Case No. SA 5712/2015 வருவாய் கணக்குகளில் மாற்றம் செய்துள்ள விவரம் தெரியவந்ததன் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
இவ்வாணையத்தால் இன்று (28.03.2016) நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு. சொ. குமார், Ex.M.C. த/பெ சொக்கலிங்கம் (லேட்), நெ.5 வேம்புலி பண்ணைக்காரன் தெரு, உள்ளகரம், சென்னை-91, காஞ்சிபுரம் மாவட்டம் அவர்களுக்கும், பொதுத் தகவல் அலுவலர் (ம) வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் அவர்களுக்கும் அழைப்பாணைகள் அனுப்பப்பட்டது. மனுதாரர் திரு. சொ. குமார் அவர்களும், திரு. எஸ். ஆதிசேஷன், பொதுத் தகவல் அலுவலர், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் அவர்களும், நேரில் இன்று ஆஜரானார்கள்.
மனுதாரர் திரு. எஸ். தேவராஜன், Dev Consultancy, எண் 76/2, சவுத் அவண்யு ரோடு, சத்துவாச்சாரி, வேலுார் மாவட்டம் என்பவர் தன்னுடைய 02.02.2015 தேதியிட்ட தகவல் அறியும்
உரிமைச் சட்டம் பிரிவு 6(1)ன்-படியான மனுவில் புதுப்பாக்கம் கிராமம் சர்வே எண் 292 பட்டா எண் 1001ல் 7 ஏக்கர் 50 செண்ட் நிலத்திற்கு தாலுக்கா அலுவகத்தில் உள்ள கணிணியில் இடை செறுக்கல் செய்து போலியாக பட்டா அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிக் பிரிவினைச் சேர்ந்த திரு.வெங்கடேசன் என்பவர் பெயரில் காஞ்சிபுர மாவட்ட குற்றப்பிரிவில் தங்கள் துறையின் மூலம் புகார் செய்யப்பட்ட புகார் விண்ணப்பத்தின் ஒளி நகல் தருமாறு கேட்டும், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில் தங்கள் அலுவலக புகாரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் ஒளி நகல் தருமாறு கேட்டும், புலன் எண் 292 தாலுக்கா கணிணியில் மீண்டும் தோப்பு என பதிவு செய்யப்படுவதற்கு தங்கள் அலுவலகத்தில் கையாளப்பட்ட கோப்பின் அனைத்துப் பக்கங்களின் ஒளி நகல் தருமாறு கேட்டும், கைது செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிக் பிரிவினைச் சேர்ந்த திரு. வெங்கடேசன் மற்றும் இது தொடர்பாக மேலும் தொடர்புள்ள நபர்கள் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு புலன் விசாரணை மேற்கொண்டுள்ளது என்ற கோப்பின் அனைத்து பக்கங்களின் ஒளி நகல் அலுவலக குறிப்புக் கட்டுடன் கேட்டும், தங்கள் அலுவலகத்தில் உள்ள ந.க.அ.4851/2013 தேதி 22.10.2013 கோப்பின் அனைத்துப் பக்கங்களின் ஒளி நகல் கேட்டும், அலுவலக விசாரணை செய்யும் அலுவலரின் பெயர், பதவி, அலுவலக முகவரி, கைப்பேசி எண் என்ற விவரம் கேட்டும், 01.10.2013 முதுல் 30.01.2015 வரை வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் பிற அலுவலர்களின் வருகை பதிவேட்டின் ஒளி நகல் கேட்டும், என்ற விவரத்தின் தகவல்கள் கேட்டு 1 முதல் 13 இனங்களில் பொதுத் தகவல் அலுவலர், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார்.
Download
Case No. SA 5712/2015 வருவாய் கணக்குகளில் மாற்றம் செய்துள்ள விவரம் தெரியவந்ததன் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
