Case No.1002442/2009 1920-க்குப் பிறகு நில அளவை செய்த ஆவணங்கள் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்

விசாரணை முடிவில் கீழ்க்கண்ட ஆணை வழங்கப்படுகிறது.
1) மனுதாரர் கேட்டுள்ள தகவல்களை வட்ட அலுவலகத்திலிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்தோ உரிய ஆவணங்களைப் பெற்று ஒவ்வொரு இனத்திற்கு தகவலையும், பதிவேடுகளின் நகல்களையும் உரிய தலைப்பின் கீழ் அத்தாட்சி இட்டு மனுதாரருக்கு 20 நாட்களுக்குள் இலவசமாக வழங்கி அதன் விவரத்தை இவ்வாணையத்திற்குத் தெரிவிக்குமாறு பொதுத் தகவல் அலுவலர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
2) மனுதாரர் குறிப்பிட்டு ஆவணங்கள் பார்வையிட தேதி குறித்து பொதுத் தகவல் அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கும் நிலையில் மனுதாரருக்கு அவ்வலுவலகத்தில் உள்ள மனுதாரர் கோரும் தகவல் சம்பந்தப்பட்ட அனைத்துக் கோப்புகளையும் மனுதாரர் பார்வைக்கு வழங்குமாறு பொதுத் தகவல் அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
3) மனுதாரர் கேட்டுள்ள தகவல்கள் சம்பந்தமாக விசாரணையின் போது அளித்த வேலூர் வட்டம், இடையஞ்சாத்து கிராமம் ஆவணங்கள் 1920– ம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட ஆவணங்களாக இருப்பதால், அதற்கு பின்பு தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் இருப்பது குறித்தும், நில அளவை செய்தது குறித்தும், பதிவேடுகள் தயாரிக்கப்பட்டு வட்ட அலுவலகத்திற்கு வழங்கியது குறித்தும் விரிவான அறிக்கையை இவ்வாணையத்திற்கு இரண்டு மாதத்திற்குள் அனுப்புமாறு ஆணையர், மத்திய நில அளவை அலுவலகம், சென்னை கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

 

 

Download

Case No.1002442/2009 1920-க்குப் பிறகு நில அளவை செய்த ஆவணங்கள் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்