Case No 28142/2009 பை-மாஸ் எண்ணிற்கு 1946-க்குப் பிறகுஎந்தெந்த புல எண்களாக மாற்றப்பட்டுள்ளது
விசாரணையில் மனுதாரர் குறிப்பிட்ட பை-மாஸ் எண். 2-A-ன் மொத்த பரப்பு 60 ஏக்கர் என்றும், மனுதாரருக்கு கொடுக்கப்பட்ட தகவலில் 44 ஏக்கர் 20 சென்ட் விவரங்கள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது குறித்து பொதுத் தகவல் அலுவலர் மனுதாரர் குறிப்பிட்டுள்ள பை-மாஸ் எண் தற்போது 3 புல எண்களாக பிரிக்கப்பட்டுள்ளதால் அது குறித்த விவரங்கள் மனுதாரருக்கு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். விசாரணையில் மனுதாரர் தெரிவித்தது போல் பரப்பளவு வேறுபடுவது குறித்து இவ்வாணையம் விசாரிக்க இயலவில்லை. மனுதாரர் கேட்டுக் கொண்டதற்கிணங்க 15.04.09 அன்று காலை 11.00 மணி அளவில் பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மனுதாரர் பார்வைக்கு வைக்குமாறும், மனுதாரர் பார்வையிட்டு கோரும் பதிவேடுகளின் நகல்களை மனுதாரருக்கு இலவசமாக அளித்து அதன் விவரத்தை இவ்வாணையத்திற்குத் தெரிவிக்குமாறு பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளூர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
Download
Case No 28142/2009 பை-மாஸ் எண்ணிற்கு 1946-க்குப் பிறகுஎந்தெந்த புல எண்களாக மாற்றப்பட்டுள்ளது

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
