Case No 12192/09 1965ம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையான காலத்திற்கு அடங்கல் நகல்கள்

இவ்வழக்கு 07.09.2009 அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை செய்யப்பட்டது. மனுதாரர், இடிகரை கிராமம், மூலப்பத்திர எண்.1489/1949ல் புல எண்.443/2, 475, 476/2, 477, 478, 479, 480, 529, 530 ஆகிய புலன்களுக்கு 1949லிருந்து 2008 வரையிலான காலத்திற்கு சிட்டா அடங்கல் வழங்குவது சம்பந்தமாக தகவல்கள் வழங்குமாறு கோரியிருந்ததாகவும், அன்றைய தேதி வரை தகவல்கள் வழங்கப்படவில்லையென்றும் தெரிவித்தார். விசாரணையின் இறுதியில் பொதுத் தகவல் அலுவலர், மனுதாரர் கோரிய தகவலை 07.10.09க்குள் வழங்குமாறு இவ்வாணையம் உத்தரவிட்டது.
இன்றைய விசாரணைக்கு வந்திருந்த பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு 1965ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையான காலத்திற்கு அடங்கல் நகல்கள் பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். மனுதாரர் கோரிய 1949 முதல் 1964ஆம் ஆண்டிற்கான அடங்கல் நகல்கள் பதிவறையில் பராமரிக்கப்படாமையால் வழங்கிட இயலாத நிலை உள்ளதாக தெரிவித்தார். எனவே, பொதுத் தகவல் அலுவலர், இவ்வாணை கிடைத்தவுடன் இது சம்பந்தமாக ரூ.20/- மதிப்புள்ள முத்திரைத் தாளில் (Non Judicial Stamp Paper) பிரமாண வாக்குமூலம் ஒன்றை எழுதி இவ்வாணையத்திற்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிடுகிறது. பிரமாண வாக்குமூலத்தின் நகல் ஒன்றை மனுதாரருக்கு அனுப்பிவிட்டு, தகவல் வழங்கிய விபரத்தை இவ்வாணையத்திற்கு உடன் தெரிவிக்குமாறும் உத்தரவிடுகிறது.

Download

Case No 12192/09 1965ம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையான காலத்திற்கு அடங்கல் நகல்கள்

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்