Case No 30020/2009 நிரந்தர கோப்புகளாக இருந்தும் தகவல் தரப்படவில்லை,பிரிவு 8(3)ன் கீழ் இருபது ஆண்டுகளுக்கு முந்தையது என்று மறுக்கப்பட்டது தவறு
விசாரணையில் பொதுத் தகவல் அலுவலரிடம் பிரிவு 8(3)ன் கீழ் தகவல் மறுக்கப்பட்டது குறித்தும் பதிவறையில் கோப்புகள் இல்லாதது குறித்தும் விசாரிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட கோப்புகள் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு 10 ஆண்டுகள் முடிந்து அனுப்பப்பட்டதாக பொதுத் தகவல் அலுவலர் தெரிவித்தார். விசாரணையில், மாவட்ட நடைமுறை நூலிலுள்ள விதிகளின்படி சம்பந்தப்பட்ட கோப்புகள் நிரந்தரமாக பராமரிக்கப்பட வேண்டிய கோப்புகளாக உள்ளதை இவ்வாணையம் சுட்டிக்காட்டியது. சம்பந்தப்பட்ட கோப்புகள் நிரந்தர கோப்புகளாக இருந்தும் தகவல் தரப்படவில்லை என்றும் பிரிவு 8(3)ன் கீழ் இருபது ஆண்டுகளுக்கு முந்தையது என்று மறுக்கப்பட்டது தவறு என்றும் இவ்வாணையம் முடிவு செய்து கீழ்க்கண்ட ஆணையை வழங்குகிறது.
1. மனுதாரர் கேட்டுள்ள தகவல்களை உரிய கோப்புகளை கண்டுபிடித்து ஒரு மாதத்திற்குள் மனுதாரருக்கு அளித்து அதன் விவரத்தினை இவ்வாணையத்திற்கு தெரிவிக்குமாறு பொதுத் தகவல் அலுவலர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
2. மனுதாரருக்கு உரிய தகவலை தராமலும் பிரிவு 8(3)ன் கீழ் தகவல் தர மறுத்ததற்கும் கோப்புகள் பதிவறையில் கிடைக்கப்பெறவில்லை என்றும் சார் பதிவாளர் அலுவலகத்தில் மனு செய்து பெற்றுக் கொள்ளுமாறு மனுதாரருக்கு தெவித்ததற்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 20(1)ன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கத்தினை சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலரிடமிருந்து பெற்று இவ்வாணையத்திற்கு ஒரு மாதத்திற்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர், காஞ்சிபுரம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
Download
Case No 30020/2009 நிரந்தர கோப்புகளாக இருந்தும் தகவல் தரப்படவில்லை,பிரிவு 8(3)ன் கீழ் இருபது ஆண்டுகளுக்கு முந்தையது என்று மறுக்கப்பட்டது தவறு

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
