Case No 1000312 1898-ம் ஆண்டு Re-settlement-படி உள்ள கிராம வரைபட நகலை மனுதாரருக்கு வழங்கிட உத்தரவு
2. மனுதாரர் 1898ம் வருடத்திய எல். அபிஷேகபுரம் மற்றும் கோ. அபிஷேகபுரம் ஆகிய கிராமங்களுக்கு re-settlement கிராம வரைபட நகல் கேட்டுள்ளார். Re-settlement பதிவேடுகள் இருக்கும்போது, கிராம வரைபடங்கள் நிச்சயமாக இருக்கவேண்டும். அதை மறுப்பதற்கில்லை. 1898-ம் ஆண்டு Re-settlement-படி உள்ள கிராம வரைபட நகலை மனுதாரருக்கு இவ்வாணை கிடைக்கப் பெற்ற 30 நாட்களுக்குள் வழங்கிட பொதுத் தகவல் அலுவலருக்கு இந்த ஆணையம் உத்தரவிடுகிறது.
3. மேலும், 1864-ம் ஆண்டு பைசலாதி ரிஜிஸ்டர் அடிப்படையில் கிராம வரைபட நகல் தயாரிக்கப்பட்டதா ? தயாரிக்கப்பட்டிருந்தால் அதன் நகல் இவ்வாணை கிடைக்கப் பெற்ற 30 நாட்களுக்குள் மனுதாரருக்கு வழங்கிட இவ்வாணையம் பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடுகிறது. ஏற்கனவே வழங்கிய பதிலில் 1864-ம் ஆண்டு பைசலாதி ரிஜிஸ்டர் கிராம வரைபட நகல் இல்லை என்று பதில் தரப்பட்டுள்ளது. எதன் அடிப்படையில் 1864ம் ஆண்டு சம்பந்தப்பட்ட பைசலாதி ரிஜிஸ்டர் பராமரிக்கப்படவில்லை என்ற விவரத்தை இந்த ஆணை கிடைக்கப் பெற்ற 30 நாட்களுக்குள் இந்த ஆணையத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்று பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது. சம்பந்தப்பட்ட கிராம வரைபட நகல் இல்லை என்றால் அதற்குரிய Affidavit (பிரமாண வாக்குமூலம்) ஒன்றை சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர் உரிய முறையில் இந்த ஆணையத்திற்கு இவ்வாணை கிடைத்த 30 நாட்களுக்குள் அளித்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்படுகிறது.
Download
Case No 1000312 1898-ம் ஆண்டு Re-settlement-படி உள்ள கிராம வரைபட நகலை மனுதாரருக்கு வழங்கிட உத்தரவு

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
