Case No 15502/2009 SLR ஆவணங்கள், நிரந்தரமாக பராமரிக்கப்பட வேண்டியவை, அவை அழிந்துவிட்டன என்பது ஏற்க இயலாது

2) இனம் 1 மற்றும் 3-க்கு ஆவணக் காப்பகத்திலிருந்து உரிய ஆவணங்களை பெற்று நகல் எடுத்து இவ்வாணை கிடைக்கப்பெற்ற ௧௫ தினங்களுக்குள் மனுதாரருக்கு அளித்து அதன் விவரத்தை இவ்வாணையத்திற்குத் தெரிவிக்குமாறு பொதுத் தகவல் அலுவலர், நில நிர்வாக ஆணையர் அலுவலகம், சென்னை கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
3) மனுதாரருக்கு ஓராண்டாக தகவல் வழங்காததற்கும், முழுத் தகவல் தராததற்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 20(1)-ன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தை பொதுத் தகவல் அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம், புரசை-பெரம்பூர் வட்டம் அவர்களிடமிருந்து பெற்று இவ்வாணையத்திற்கு ஒரு மாதத்திற்குள் அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர், சென்னை கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
4) மனுதாரருக்கு ஓராண்டாக தகவல் வழங்காததற்கும், ஆவணக் காப்பகத்திலிருந்து ஆவணங்களைப் பெற்று தகவல்களை வழங்காததற்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 20(1)-ன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தை பொதுத் தகவல் அலுவலரிடமிருந்து பெற்று இவ்வாணையத்திற்கு ஒரு மாதத்திற்குள் அனுப்புமாறு ஆணையர், நில நிர்வாகத் துறை, சென்னை கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

Download

Case No 15502/2009 SLR ஆவணங்கள், நிரந்தரமாக பராமரிக்கப்பட வேண்டியவை, அவை அழிந்துவிட்டன என்பது ஏற்க இயலாது

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்