Case No 322/2009 77 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்களை, ஆவணக் காப்பகத்திலிருந்து பெற்று வழங்க வேண்டும் / பிரமான வாக்குமூலம் தாக்கல் செய்ய உத்தரவு

 அக்கோப்புகள் எத்தனை ஆண்டு எந்த நிலையில் முடிக்கப்பட்டது என்று தெளிவாக தெரியாத நிலையிலும், தன் பதிவேடுகள் இல்லாத நிலையிலும் அது குறித்த விவரங்கள் எதுவும் அவ்வலுவலகத்தில் இல்லை என்று தெரிவித்தார். விசாரணையில் மனுதாரர் குறிப்பிட்டுள்ள கோப்புகள் நிரந்தர முடிவாக முடிக்கப்பட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. மனுதாரருக்கு தகவல் தரப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பொதுத் தகவல் அலுவலர் வருவாய் நிர்வாக ஆணையர்
அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ஒரு குறிப்புப் பதிவேட்டில் ( Index Register) மனுதாரர் குறிப்பிடும் புல எண்கள் குறித்த விவரங்கள் இருப்பதால் அதன் அடிப்படையில் ஆவணக் காப்பகத்திற்கு அக்கோப்பு கேட்டு கடிதம் எழுதியிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் கீழ்க்கண்ட ஆணை வழங்கப்படுகிறது.
1) மனுதாரர் குறிப்பிட்டுள்ள விவரங்களை ஆவணக் காப்பகத்திலிருந்து சம்பந்தப்பட்ட கோப்புகளை நேரிடையாக பெற்று மனுதாரர் கோரும் தகவல்களை இவ்வாணை கிடைக்கப்பெற்ற 20 தினங்களுக்குள் மனுதாரருக்கு இலவசமாக அளித்து அதன் விவரத்தை இவ்வாணையத்திற்குத் தெரிவிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையிடப்படுகிறது.
2) மனுதாரர் கோரும் தகவல்கள் அவ்வலுவலகத்திலோ அல்லது வேறு அலுவலகத்திலோ அல்லது ஆவணக் காப்பகத்திலோ இல்லாத நிலையில் அது குறித்து பிரமாண வாக்குமூலம் இவ்வாணையத்திற்கு அனுப்புமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையிடப்படுகிறது.

Download

Case No 322/2009 77 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்களை, ஆவணக் காப்பகத்திலிருந்து பெற்று வழங்க வேண்டும் / பிரமான வாக்குமூலம் தாக்கல் செய்ய உத்தரவு

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்