Case No 37171/2008 1953 வரைபடத்தைத் தேடிப் பார்த்து இல்லையென்றால் பிரமாண வாக்குமூலப் பத்திரம் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும்
மனுதாரர் விசாரணைக்கு வருகின்ற பொழுது இதனைத் தருவதற்காகக் கொண்டு வந்தததாகப் பொதுத் தகவல் அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம் கூறினார். இந்நிலையில் கீழ்க்கண்ட ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
1. கிராம நிர்வாக அலுவலர் அளித்துள்ள வரைபடங்கள் அடங்கிய அறிக்கையை இவ்வாணை பெறப்பட்ட ஒரு வாரத்திற்குள் மனுதாரருக்கு அளித்து, ஒப்புகைப் பெற்று அதன் விவரத்தை ஆணையத்திற்குத் தெரிவிக்க வேண்டுமென்று பொதுத் தகவல் அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம், காரைக்குடி வட்டத்திற்கு ஆணையிடப்படுகிறது.
2. 1953-ல் தயாரிக்கப்பட்ட வரைபடக் கணக்கினை மனுதாரர் கேட்டுள்ளதால் சிவகங்கை தேவஸ்தான அலுவலகத்தில் தேடிப் பார்க்கும்படியாகவும் ஒரு வார காலத்திற்குள் இது பற்றிய தகவலை மனுதாரருக்குத் தெரிவிக்க வேண்டுமென்றும், சிவகங்கை தேவஸ்தான அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையிடப்படுகிறது. வரைபடம் இல்லையென்றால் பிரமாண வாக்குமூலப் பத்திரம் ஆணையத்திற்கு அளிக்க வேண்டுமெனவும் ஆணையிடப்படுகிறது.
3. ஆணை பெறப்பட்ட ஒரு வாரத்திற்குள் 1953 வரைபடத்தைத் தேடிப் பார்த்து இல்லையென்றால் பிரமாண வாக்குமூலப் பத்திரம் ஆணையத்திற்கு அளிக்கும்படி மத்திய நில அளவைத் துறை, சென்னை அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையிடப்டுகிறது.
Download
Case No 37171/2008 1953 வரைபடத்தைத் தேடிப் பார்த்து இல்லையென்றால் பிரமாண வாக்குமூலப் பத்திரம் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும்

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
