Case No 30049/2008 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோப்புகள் மற்றும் பதிவேடுகள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும்

மனுதாரர் கேட்டுள்ள தகவல்கள், உண்மை நகல், ‘அ’ பதிவேட்டில் பதியப்பட்டுள்ள நிலத்திற்கான வகையறா உண்மை நகல் இவற்றைப் பெறுவதற்காகப் பல மனுக்களை அளித்துள்ளதாக விசாரணையில் கூறினார். பொதுத் தகவல் அலுவலரிடம் விசாரித்த போது நில நிர்வாகத் துறை, சேப்பாக்கம் அலுவலகத்தில் மனுதாரர் கேட்டுள்ள தகவல்கள் இல்லையென்று கூறினார். மனுதாரர் கேட்டுள்ள ஆவணங்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் கட்டாயம் இருக்குமென்று கூறினார். அதற்குச் சான்றாக 10.04.2001 நாளிட்ட அரசு கடிதம் ஆணையத்திற்கு அளிக்கப்பட்டது. அதன்படி 31.03.2001-க்குப் பிறகு அனைத்து உதவி நில வரித் திட்ட அலுவலகங்களை உடன் கலைத்து ஆணையிடப்பட்டதைத் தொடர்ந்து ஆவணங்களைப் பட்டியலிட்டு ஒப்படைக்கும் பணியை 30.04.2001-க்குள் முடிக்குமாறும், ஆவணக் காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டிய கோப்புகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோப்புகள் மற்றும் பதிவேடுகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அறிவித்துள்ள ஆணையின்படி மனுதாரர் கேட்டுள்ள தகவல்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டுமென்று பொதுத் தகவல் அலுவலர் கூறினார். இந்நிலையில் கீழ்க்கண்ட ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
1. மனுதாரர் கேட்டுள்ள தகவல்களை இவ்வாணை பெறப்பட்ட 15 நாட்களுக்குள்
அளித்து, ஒப்புகைப் பெற்று அதன் விவரத்தை ஆணையத்திற்குத் தெரிவிக்கும்படி பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஆணையிடப்படுகிறது.

2. மனுதாரர் தகவலைப் பெற நீண்ட காலமாக முயற்சித்து வருவதால் மாவட்ட
ஆட்சியர் அவர்கள் தனிப்பட்ட முறையில் அதிகாரிகளை நியமித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மனுதாரர் கோரிய தகவல்களை வழங்கும்படி மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம் மாவட்டம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

 

 

Download

Case No 30049/2008 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோப்புகள் மற்றும் பதிவேடுகள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும்

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்