Case No 51582/2013 அ பதிவேடு நகலினை (1986க்கு முந்தியது) 15 தினங்களுக்குள் வழங்கிவிடுவதாக எழுத்துமூலம் உறுதி
எனவே இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் திரு வெ. சோமசுந்தரம் என்பவரிடமிருந்து விதி 19(8)(b)ன்கீழ், நஷ்ட ஈடாக ரூ.10,000/-ஐ அவருடைய உயரதிகாரி மூலம் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து மனுதாரருக்கு ஏன் வழங்கக் கூடாது என்பதற்கு அவரது எழுத்துமூலமான விளக்கத்தை இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் நேரிடையாக சமர்ப்பிக்க இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலருக்கு இதன்மூலம் உத்திரவிடப்படுகிறது.
2. வழக்கின் விசாரணை இன்று (29.01.2015) பிற்பகல் 4.00 மணிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
3. இன்று மாலை நடைபெற்ற விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் மனுதாரருக்கு அவர் கோரியுள்ள பெருங்குடி கிராம புல எண் 147/2ன் அ பதிவேடு நகலினை (1986க்கு முந்தியது) மாவட்ட நில அளவை உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து பெற்று 15 தினங்களுக்குள் வழங்கிவிடுவதாக எழுத்துமூலம் உறுதியளித்தார். மனுதாரரும் அதனை ஏற்றுக் கொண்டார்.
4.இன்று மாலை நடைபெற்ற விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் வழங்கப்படுகின்றன:-
1. பொதுத் தகவல் அலுவலர் தான் உறுதியளித்தபடி மனுதாரருக்கு அவர் கோரிய தகவலை சட்டப்பிரிவு 7(6)ன்படி இலவசமாக வழங்கி, அவர் ஏற்பளிப்பு செய்த நகலை அறிக்கையாக இவ்வாணையத்தில் நடைபெறும் மறுவிசாரணைக்கு நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க இதன்மூலம் உத்திரவிடப்படுகிறது.
2. வழக்கின் மறுவிசாரணை 26.02.2015 அன்று காலை 10.30 மணிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அன்றைய தினம் மனுதாரர் மற்றும் பொதுத் தகவல் அலுவலர் தவறாமல் ஆஜராக ஆணையிடப்படுகிறது.
Download
Case No 51582/2013 அ பதிவேடு நகலினை (1986க்கு முந்தியது) 15 தினங்களுக்குள் வழங்கிவிடுவதாக எழுத்துமூலம் உறுதிற்றும் பதிவேடுகள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும்

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
