Case No 14669/2008 15 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றாலும், குடிநீர் இணைப்பு ஆவணங்கள் நிலையானவை

3. இதில் முதல் கேள்விக்கும், மூன்றாம் கேள்விக்கும், நான்காம் கேள்விக்கும், ஐந்தாம் கேள்விக்கும் சரியான, முழுமையான தகவல்களை பொதுத் தகவல் அலுவலர் மனுதாரருக்கு வழங்கவில்லை. மனுதாரர் தகவல் கேட்டு ஓராண்டு மூன்று மாதங்கள் கழித்தும் சரியான தகவல்கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், மனுதாரர் கேட்ட கேள்விக்கு சரியான முழுமையான தகவல்களை இவ்வாணை கிடைக்கப்பெற்ற 20 நாட்களுக்குள் மனுதாரருக்கு வழங்கி, அதன் விபரத்தை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டுமென்று ஆணையம் உத்தரவிடுகிறது.
4. பொதுத் தகவல் அலுவலர் முப்பது நாட்களுக்குள் தகவல் வழங்காததற்கு தகுந்த காரணங்கள் அளிக்கவில்லை. ஆவணங்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், தற்சமயம் இல்லை என்றும், தகவல் தெரிவிக்கப்பட்டது. இது ஏற்புடையதாக இல்லை. இந்த ஆவணங்கள் நிலையான ஆவணங்களாகும். தற்சமயம் இல்லையென்ற வாதம் பொதுத் தகவல் அலுவலரின் அசிரத்தையைத் தான் காட்டுகிறது. முயற்சி எடுத்து மனுதாரருக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி உரிய காலத்தில் தகவல்கள் வழங்க வேண்டுமென்ற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுவினை உதாசீனப்படுத்தி சரியான தகவல்கள் வழங்குவதற்குப் பதிலாக ஏதோ பதில் கொடுத்தால் போதுமென்ற நிலைப்பாடுதான் தெரிகிறது. ஆகவே பொதுத் தகவல் அலுவலர் மீது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 20ன் கீழ் ஏன் ரூ.25,000/- அபராதம் விதிக்கக்கூடடது என்பதற்கான காரண விளக்கங்களை மேலாண்மை இயக்குநர், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், மூலமாக இவ்வாணை கிடைக்கப் பெற்ற முப்பது நாட்களுக்குள் அளிக்க இவ்வாணையம் உத்தரவிடுகிறது.

Download

Case No 14669/2008 15 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றாலும், குடிநீர் இணைப்பு ஆவணங்கள், நிலையானவை

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்