Case No 27152/2008 FMB sketch-ன் ஒளிநகல் மனுதாரருக்கு வழங்கிட உத்தரவு

அதனுடைய ஒரிஜினல் வரைபட நகல் இந்த ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் 17.11.06 அன்று சப்-டிவிசன் செய்யப்பட்டுள்ள 41/3B1க்கு மனுதாரருக்கு உண்டான பத்திரத்துடன் விண்ணப்பத்தின் மனுக்கள் மற்றும் ஆவணங்கள் தனக்கு வழங்கப்படவில்லை என்று விசாரணையின் போது தெரிவித்தார். 17.11.06 அன்று 41/3B1, 41/3B2 என்று பிரித்து மனுதாரருக்கு சப்-டிவிசன் தயாரிக்கப்பட்டதாகவும் இந்த ஆணையத்தின் முன் பொதுத் தகவல் அலுவலர் தெரிவித்தார். மனுதாரருடைய வாதம் பத்திரப்படி சப்-டிவிசன் செய்யப்பட்ட போது 20அடி பொது வழிக்கு விடப்படவில்லை என்றும், அது 413B1க்குடைய உரிமையாளருக்கு சேர்க்கப்பட்டுள்ளது என்பதாகும். பத்திரப்படி சப்-டிவிசன் செய்யப்பட்டதா? வட்டாட்சியருடைய நடவடிக்கை சரியானதா, இல்லையா? என்று இந்த ஆணையத்தால் பரிசீலிக்க இயலாது. அரசு ஆவணங்களில் உள்ள ஒளிநகல்கள் அப்படியே மனுதாரருக்கு வழங்கிட இந்த ஆணையம் உத்தரவிடுகிறது. அதன்படி இந்த ஆணையத்தின் முன் சமர்ப்பித்த புல எண்.41க்கான FMB sketch-ன் ஒளிநகல் மனுதாரருக்கு இந்த ஆணையத்தின் முன்பே மனுதாரருக்கு வழங்கிட இந்த ஆணையம் உத்தரவிடுகிறது.

Download

Case No 27152/2008 FMB sketch-ன் ஒளிநகல் மனுதாரருக்கு வழங்கிட உத்தரவு

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்