Case No 60244/2012 சொத்து வரி தொடர்புடைய ஆவணங்கள் கேட்டு மனு
3. இனம் 6, 7, 9 ஆகியவைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலக ஆவணங்களை, தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 18(3)(b)ன்கீழ் ஆய்வு செய்து, கண்டுபிடித்து மனுதாரருக்கு அது குறித்த தகவலை இவ்வாணைகள் கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள் வழங்க, கோவை மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு இதன் மூலம் உத்திரவிடப்படுகிறது.
4. குனியமுத்தூர் நகராட்சி சம்பந்தமாக இனம் 6, 7, 9 க்கு மனுதாரருக்கு தகவல் வழங்க முடியவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கிடைக்கப் பெறவில்லை என்றால், அது எவ்வாறு கிடைக்கப் பெறவில்லை, அதற்கு யார் பொறுப்பு, அவ்வாறு ஒப்படைக்கப்படாதவர் மீது என்ன ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து, விரிவான ஒரு அறிக்கையை ஒரு பிரமாண வாக்குமூலமாக (Sworn Affidavit) இவ்வாணை கிடைக்கப் பெற்ற 30 தினங்களுக்குள் தயார் செய்து, இவ்வாணையத்திற்கும், மனுதாரருக்கும் அனுப்பி வைக்க, கோவை மாநகராட்சி, ஆணையர் அவர்களுக்கு இதன் மூலம் உத்திரவிடப்படுகிறது.
5. மனுதாரருக்கு அவர் கோரிய தகவலை சுமார் 9 மாத காலமாக வழங்காத பொதுத் தகவல் அலுவலர் மீது ஏன் விதி 20(1)ன் கீழ் அதிகபட்ச தண்டமாக ரூ.25,000/- விதிக்கக் கூடாது என்பதற்கு, சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர்களிடமிருந்து அவர்களது எழுத்து மூலமான விளக்கத்தைப் பெற்று, இவ்வாணை கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள் இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்க கோவை மாநகராட்சி, ஆணையர் அவர்களுக்கு இதன் மூலம் உத்திரவிடப்படுகிறது.

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
