Case No 8770/2008 புல எண் வரைபடம் தொடர்பான மனு
விசாரணை முடிவில் வினா எண் 4-க்கு மனுதாரருக்கு நகர புல எண் 2657 குறித்து வரை படம் பொதுத் தகவல் அலுவலர் அலுவலகத்தில் இல்லை என்பதால், அவைகள் 2006-ம் ஆண்டு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு படிகள் எடுக்கப்பட்டு வருவதாகப் பொதுத் தகவல் அலுவலர் தெரிவித்த காரணத்தால், மனுதாரர் கேட்டுள்ள புல எண் வரை படம், சம்பந்தப்பட்ட இயக்குநர் அலுவலகத்திலிருந்து பெற்று வழங்கப்பட வேண்டும். வினா எண் 5-க்கு உதவி இயக்குநனரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின் நகல் மனுதாரருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆகவே விசாரணை முடிவில் கீழ்க்கண்டவாறு ஆணை வழங்கப்படுகிறது.
மனுதாரர் குறிப்பிட்டுள்ள புல எண் குறித்த வரை படம் துறைத் தலைமை இடத்திலிருந்து பெற்றும், உதவி இயக்குநர் அறிக்கை பொதுத் தகவல் அலுவலர் அலுவலகத்தில் உள்ள அலுவலகக் கோப்பிலேயே இருப்பதால் அதன் நகலை மனுதாரருக்கு இவ்வாணை பிறப்பிக்கப்பட்ட 15 தினங்களுக்குள் வழங்கி அதன் விவரத்தை இவ்வாணையத்திற்கு தெரிவிக்குமாறு ஆணையிடப்படுகிறது.

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
