Case No.SA 475/2015 1910 முதல் 1945 ஆம் வருடம் வரையிலான Permanent Land Register ஆண்டுகளுக்குரிய ஆவணங்கள் வழங்க உத்திரவிடுமாறு ஆணை

4.இன்றைய விசாரணைக்கு ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம், அயன்புரம் வட்டம், அயன்புரம், சென்னை ஏற்கெனவே மனுதாரருக்கு 12.02.2015 தேதியிட்ட பதில் ஒன்று தங்கள் அலுவலகத்தினரால் அனுப்பப்பட்டது என்றும், அதன் மூலம் சிறுவள்ளூர் கிராமம், Block. No.13 ல் கடைசி நகர புல எண் 13ல் முடிகிறது என்றும் எனவே மனுதாரர் நகர புல எண் 61 குறித்து கேட்டுள்ள PLR Extract வழங்க இயலாது என்று கேட்டு அதன் பிறகு டவுன் சர்வே சம்மந்தப்பட்ட கோப்புகளின் பணி முடிந்த பிறகு தங்களுடைய அலுவலகத்திற்கு திரும்ப பெறப்பட்ட உடன் சரிபார்த்தப்போது Block. No.13, டவுன் சர்வே எண் 61 தற்போதைய டவுன் சர்வே ரிஜிஸ்டர் இருப்பது தெரிய வந்தது என்றும் தற்போது மேற்சொன்ன டவுன் சர்வே எண் 61 ராஜகோபால் மகன் நடராஜன் என்பவர் பெயரில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
5. சென்னை மாவட்டம் பெரம்பூர்-புரசைவாக்கம் வட்டம், சிறுவள்ளூர் வில்லேஜ் சர்வே எண் 61, Block.13, S.No.61 உட்பட்ட சொத்தின் 1910 ஆம் வருடம் முதல் 1945 ஆம் வருடம் வரையிலான Permanent Land Register ஆண்டுகளுக்குரிய ஆவணங்கள் தங்களுடைய அலுவலகத்தில் பராமரிக்கப்படவில்லை என்றும் பொதுத் தகவல் அலுவலர் தெரிவித்தார். மேற்சொன்ன ஆவணங்கள் இயக்குநர், ஆவண காப்பகம், எழும்பூர், சென்னை இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் மேற்சொன்ன அலுவலகத்தை அணுகினால் மேற்சொன்ன புல எண்ணுக்கு உண்டான 1910 ஆம் வருடம் முதல் 1945 ஆம் வருடம் வரையிலான ஆவண நகல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார். இன்றைய தினம் பொதுத் தகவல் அலுவலர் ஆணையத்தின் முன்பு சமர்ப்பித்த தற்போதைய சர்வே எண் 61க்கு உண்டான சர்வே எண் ரிஜிஸ்டர் நகல் மற்றும் தகவல்கள் மனுதாரரின் தரப்பினர் நேரில் வழங்கப்பட்டது என்றும் இந்நிலையில் இந்த இரண்டாம் மேல்முறையீட்டு மனுவில் கீழ்க்கண்ட ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன :-
i) இந்த உத்தரவு கிடைத்த 15 நாட்களுக்குள் இயக்குநர், ஆவண காப்பகம், எழும்பூர், சென்னை மனுதாரருக்கு 21.11.2014 தேதியிட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)ன்-படியான மனுவில் கேட்டுள்ள சிறுவள்ளூர் வில்லேஜ் சர்வே எண் 61, Block.13, S.No.61 உட்பட்ட சொத்தின் 1910 ஆம் வருடம் முதல் 1945 ஆம் வருடம் வரையிலான Permanent Land Register ஆண்டுகளுக்குரிய ஆவணங்கள் (முந்தைய பெரம்பூர், புரசைவாக்கம் வட்டம் சம்மந்தப்பட்ட) தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்திற்கு உட்பட்டு முழுமையாக வழங்க உத்திரவிடுமாறு மனுதாரர் ஆணையத்தைக் கோரினார். அவரது கோரிக்கையை ஆணையம் ஏற்று, மனுதாரருக்கு அவர் கோரிய தகவலை தகவல் அறியும் உரிமைச்சட்டத்திற்கு உட்பட்டு இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி அனுப்பி அதன் அறிக்கையை 20 தினங்களுக்குள் தற்போதைய பொதுத் தகவல் அலுவலர், உதவி ஆணையர், ஆவணக் காப்பகம், எழும்பூர், சென்னை-8க்கு உத்தரவிடப்படுகிறது. இந்நிலையில் இவ்வழக்கின் மீதான விசாரணையை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது.

Download

Case No.SA 475/2015 1910 முதல் 1945 ஆம் வருடம் வரையிலான Permanent Land Register ஆண்டுகளுக்குரிய ஆவணங்கள் வழங்க உத்திரவிடுமாறு ஆணை

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்