Case No 1000138 68 வருடங்களுக்கு முந்தைய, 1951-ம் ஆண்டிற்கான லேஅவுட் பிளான் நகல் வழங்கப்பட்டது
3. இன்றைய விசாரணையின்போது, பொதுத் தகவல் அலுவலர், மனுதாரர் கோரியுள்ள பிளான் எண்.192/51ன் நகல் நகராட்சி அலுவலகத்தில் கிடைக்கவில்லை யென்றும், அதன் நகல், வீட்டுமனை கூட்டுறவு சங்கத்தில் உள்ளதாகத் தெரிவித்து. அவர்களிடமிருந்து பெற்று வழங்குவதாக இவ்வாணையத்தின் முன் கூறினார். பொதுத் தகவல் அலுவலர், இவ்வாணையத்தின் முன் சமர்ப்பித்த தீர்மான பதிவேட்டில் மனுதாரர் கோரிய பிளான் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதனை இவ்வாணையத்தின் முன் சமர்ப்பித்தார். மேலும், தனது அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை மீண்டும் ஒருமுறை தேடிப்பார்ப்பதற்கும், அவை கிடைக்காவிடில், வீட்டுமனை கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் பெற்று வழங்குவதற்கும், சிறிது கால அவகாசம் அளிக்குமாறு இவ்வாணையத்திடம் முறையிட்டார். இந்நிலையில், மனுதாரர் கோரிய திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிராமம் 61, பல்லடம் டவுன் பிளான் நகல் 192/51ன் நகலை 15.4.2010க்குள் மனுதாரருக்கு வழங்கி, மனுதாரரின் கையொப்பம் பெற்ற நகலையும், மனுதாரருக்கு அளிக்கப்பட்ட விவரத்தையும் இவ்வாணையத்திற்கு 22.4.2010க்குள் அனுப்பி வைக்குமாறு, பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது.
Download
Case No 1000138 68 வருடங்களுக்கு முந்தைய, 1951-ம் ஆண்டிற்கான லேஅவுட் பிளான் நகல் வழங்கப்பட்டது

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
