Case No.1001949/2010 மின் இணைப்பு சம்பந்தப்பட்ட ஆவணம் 10 ஆண்டுகள் பராமரிக்கப்பட வேண்டும்

பொதுத் தகவல் அலுவலரிடம் விசாரித்ததில் மனுதாரர் கேட்டுள்ள குறிப்பிட்ட மின் இணைப்பு குறித்த கோப்பு 2005-ம் ஆண்டுக்குரியது என்றும், 2005-ம் ஆண்டுக்குரிய அனைத்துக் கோப்புகளும் இருப்பதாகவும், மனுதாரர் குறிப்பிட்டுள்ள மின் இணைப்பு குறித்த கோப்பு மட்டும் அவ்வலுவலகத்தில் இல்லை என்றும் தெரிவித்தார். மனுதாரர் கேட்டுள்ள தகவல் குறிப்பிட்ட கோப்பு என்பதால் மனுதாரருக்கு கோப்பு கிடைக்காத நிலையில் தகவல் வழங்கப்படவில்லை என்று விசாரணையில் தெரிய வருகிறது. விசாரணையில் பொதுத் தகவல் அலுவலர் சம்பந்தப்பட்ட ஆவணம் 10 ஆண்டுகள் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், குறிப்பிட்ட ஆவணம் மட்டும் அந்த ஆண்டு ஆவணங்களில் இல்லை என்றும் தெரிவித்தார். விசாரணை முடிவில் கீழ்க்கண்ட ஆணை வழங்கப்படுகிறது.
1) மனுதாார் கேட்டுள்ள தகவலை உரிய கோப்பினை தேடி எடுத்து மனுதாரருக்கு 15 தினங்களுக்குள் இனம் 3 மற்றும் 4-க்கு இலவசமாக வழங்கி அதன் விவரத்தை இவ்வாணையத்திற்குத் தெரிவிக்குமாறு பொதுத் தகவல் அலுவலர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
2) குறிப்பிட்டு 15 தினங்களுக்குள் கோப்பு கிடைக்கப்பெறாவிடில் அது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையினை விரிவான அறிக்கையுடன் ஒரு மாதத்திற்குள் அளிக்குமாறு பொதுத் தகவல் அலுவலர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

Download

Case No.1001949/2010 மின் இணைப்பு சம்பந்தப்பட்ட ஆவணம் 10 ஆண்டுகள் பராமரிக்கப்பட வேண்டும்

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்