Case No.1002450/2010 'அ' பதிவேடு நிரந்தர ஆவணமாகக் கருதப்படுவதால், நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பராமரிக்க வேண்டும்

இன்று (17/05/2010) இவ்வாணையத்தால் நடத்தப்பெற்ற விசாரணைக்கு மனுதாரர் டாக்டர் வி.பூபதி, அவர்கள் சார்பாக திரு. டி. மலைவீரன், அவர்கள் ஆஜரானார். பொது அதிகார அமைப்பு / பொதுத் தகவல் அலுவலர் சார்பாக திரு. கே.ஆர். இராஜமதிவாணன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியர் (பொது), மதுரை, அவர்கள் ஆஜரானார்.
2. மனுதாரர் சார்பாக திரு. மலைவீரன் ஆஜராகி 1980ம் வருடம் முதல் 1985ம் வருடம் வரை உள்ள சர்வே எண். 243/2C/1ஏ-க்குரிய ‘அ’ பதிவேட்டின் நகல் கேட்டுள்ளார். இன்று ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் நைந்து போன நிலையில் உள்ள ‘அ’ பதிவேட்டினை இந்த ஆணையத்தின் முன் தாக்கல் செய்தார். அது 1910ம் ஆண்டுக்குரிய ஆவணமாக இருக்கின்ற காரணத்தினால் பராமரிப்பின்றி நைந்து போன நிலையில் உள்ளது. இது நிரந்தர ஆவணமாகக் கருதப்படுவதால், இதை இன்றைய நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
3.இதற்குத் தொடர்புடைய ஆவணங்கள் மத்திய நில அளவைத் துறையிலோ அல்லது ஆவணக் காப்பகத்திலோ இருக்குமா என்பதைப் பார்த்து மத்திய ஆவணக் காப்பகத்தில் இந்தப் பதிவுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட புல எண்ணுக்குரிய ‘அ’ பதிவேட்டின் நகலை வழங்கிட இந்த ஆணையம் பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடுகிறது. இவ்வாணை கிடைத்த 30 நாட்களுக்குள் மனுதாரருக்குத் தகவல்கள் வழங்கி, அதன் விவரத்தையும் இந்த ஆணையத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.

Download

Case No.1002450/2010 ‘அ’ பதிவேடு நிரந்தர ஆவணமாகக் கருதப்படுவதால், நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பராமரிக்க வேண்டும்

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்