Case No 1051/2015 நிரந்தர கோப்பு கிடைக்கவில்லையெனில் பொறுப்பு யார் என்பதை நிர்ணயித்து கிடைக்கப் பெறாமல் போனதற்கு அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
3. பொதுத் தகவல் அலுவலரும் மேல்முறையீட்டு அலுவலரும் மனுதாரருக்கு விடுபட்ட இனம் 5-க்கு தொடர்ந்து தகவலை வழங்க மறுத்து வரும் காரணத்தால் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 18(3)(b)-ன் கீழ் மனுதாரர் கோரும் தகவல் அடங்கிய ஆவணங்களை ஆய்வு செய்து அவர் கோரும் தகவலை தேடி கண்டுபிடித்து இவ்வாணை கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக்குள் இலவசமாக வழங்கி அதனை மனுதாரர் பெற்று ஏற்பளிப்பு செய்த விவர அறிக்கையை இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்குமாறு இதன்மூலம் அவருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
4. இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் தெரிவிப்பது போல் 20 வருடமான அக்கோப்பு கிடைக்கப் பெறாமல் போயிருப்பின் அது கிடைக்கப் பெறாமல் போனதற்கு யார் பொறுப்பு, அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, மனுதாரர் கோரும் கோப்பு அழிக்கப்பட்டிருப்பின் அழிப்பிற்கான ஆணைகள் குறித்த விபரங்களையும், அழிப்பு பதிவேட்டில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட சம்பந்தப்பட்ட பக்கத்தின் பதிவு பற்றியும் ஒரு பிரமாண வாக்குமூலமாக தயார் செய்து இவ்வாணையத்திற்கும் மனுதாரருக்கும் இவ்வாணை கிடைக்கப் பெற்ற 30 தினங்களுக்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர், திருவள்ளூர் மாவட்டம் அவர்களுக்கு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
Download
Case No 1051/2015 நிரந்தர கோப்பு கிடைக்கவில்லையெனில் பொறுப்பு யார் என்பதை நிர்ணயித்து கிடைக்கப் பெறாமல் போனதற்கு அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
