Case No.1135/2015 100 ஆண்டுகளுக்கு முந்தைய நிலஆவண பதிவேடுகள் வருவாய் துறையின் எந்த அலுவலரால் பராமரிக்கப்படவேண்டும் என்ற விவரம் கேட்டு மனு
இது குறித்து விரிவான விசாரணை 07.12.2015 அன்று நடத்தப்பட்டு முடிவில், கீழ்க்கண்ட ஆணைகள் வழங்கப்பட்டிருந்தன :-
“3.இவ்வாணையத்தால் இன்று (07.12.2015) நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு. கோ. நீலமேகம், எண் 4, தனக்கோட்டிஅம்மாள் தோட்டம், மாம்பலம் நெடுஞ்சாலை, தி. நகர், சென்னை அவர்களும், பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம் அவர்களது பேரிடர் காரணமாக பொதுத் தகவல் அலுவலர் அவர்களும் ஆஜராகவில்லை, இந்நிலையில் இருதரப்பினரின் ஆஜரின்மையின் காரணமாக இவ்வழக்கின் விசாரணையை வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. நாளும், நேரமும் பின்னர் அறிவிக்கப்படும்”.
மனுதாரருக்கு முழுமையான தகவல்கள் வழங்கப்படாதக் காரணத்தால், அதன் மீதான விசாரணை இன்று (29.02.2016) நடைபெற்றது. இன்றைய தின விசாரணையின்போது மனுதாரர் திரு. கோ. நீலமேகம் ஏற்கெனவே பொதுத் தகவல் அலுவலர் ஆவண காப்பகம், எழும்பூர் அவர்களிடம் தான் கோரியிருந்த இதே தகவல்கள் தனக்கு கிடைக்கப்பெறாத நிலையில் SA 4905/D/2015 என்ற மேல்முறையீட்டு மனுவை மாநில தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்து உள்ளதாகவும், மேற்சொன்ன மனுவிலும் இதே தகவல்களை கேட்டுள்ளதாலும், 26.10.2015 தேதியிட்டு மாண்புமிகு ஆணையர் திரு.சி.கிறிஸ்டோபர் நெல்சன் அவர்கள் உத்திரவிட்டும்கூட சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர் தான் கோரிய தகவல்களை தனக்கு வழங்கவில்லை என தெரிவித்தார். இந்நிலையில் மனுதாரருடைய இரண்டாம் மேல்முறையீட்டு மனு (SA 4905/D/2015)ஐ ஏற்கெனவே விசாரித்த அதே ஆணையரின் முன்பு இந்த இரு வழக்குகளையும் விசாரிப்பதுதான் நீதியின் நலனுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் கேட்டுக்கொண்டார். எனவே SA 1135/A/2015 (SA 1136/A/2015) என்ற இவ்விரு வழக்குகளையும் மாண்புமிகு ஆணையர் திரு.சி.கிறிஸ்டோபர் நெல்சன் முன்பாக பட்டியலிட்டு விசாரணை நடத்த உத்திரவிடுமாறு கேட்டு, மாநில தலைமை ஆணையர் அவர்களுக்கு இந்த கோப்புகளை அனுப்பிவைக்க பதிவாளர் அவர்களுக்கு உத்திரவிடப்படுகிறது.
Download
Case No.1135/2015 100 ஆண்டுகளுக்கு முந்தைய நிலஆவண பதிவேடுகள் வருவாய் துறையின் எந்த அலுவலரால் பராமரிக்கப்படவேண்டும் என்ற விவரம் கேட்டு மனு

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
