Case No 14922/2009 1948ஆம் வருடத்திய முந்தைய சர்வே ஓ.எஸ்.ஆர். ஆவணங்களின் நகலை வழங்க உத்தரவு
இன்று (29.4.2010) இவ்வாணையத்தால் நடத்தப்பட்ட விசாரணைக்கு பொது அதிகார அமைப்பின் சார்பில் சென்னை நில நிருவாக ஆணையர் அலுவலகத்தின் உதவி ஆணையர் திரு எஸ்.ஆர். புவனேஸ்வரன் வந்திருந்தார்.
2. இது குறித்த வழக்கு (வழக்கு எண். 14922/விசாரணை/09) 24.9.2009 அன்று இவ்வாணையத்தால் நடத்தப்பட்டது. மனுதாரருக்கு 1948க்கு ஜமீன் ஒழிப்பிற்கு முந்தைய எஸ்,எல்.ஆர். நிலப்பதிவேட்டின் நகல்களை வழங்குமாறு 6.10.2009 அன்று உத்தரவிட்டது.
3. மனுதாரர், 6.11.2009 நாளிட்ட கடிதத்தில், முழுமையான ஆவணங்கள் அளிக்கப்படவில்லையென்று தெரிவித்திருந்ததன் அடிப்படையில், இன்று (29-4-2010) பொதுத் தகவல் அலுவலர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
4. இன்றைய விசாரணைக்கு வந்திருந்த பொதுத் தகவல் அலுவலர், மனுதாரர் கோரிய 1948க்கு முந்தைய ஜமீன் ஒழிப்புச் சட்டத்திற்கு முந்தைய சர்வே ஓ.எஸ்.ஆர். நகல் வழங்கக் கோரியிருந்தார். இதுசம்பந்தமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக
ஆவணக் காப்பகத்தில் இல்லையென்று தெரிவித்தார். இந்நிலையில், பொதுத் தகவல் அலுவலருக்கு, அவர் கோரியபடி, 1955ஆம் ஆண்டு உதவி செட்டில்மெண்ட் அலுவலர், அருப்புக் கோட்டை அவர்கள் பிறப்பித்த நகல் ஒன்று, இவ்வாணையத்தின் முன் வழங்கப்பட்டது. பொதுத் தகவல் அலுவலர் மனுதாரர் கோரிய ஆவணங்களை தேடிப்பார்த்து அளிப்பதாகத் தெரிவித்தார். இந்நிலையில், மனுதாரருக்கு, விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், அப்பனேரி கிராமம், சர்வே எண்.1 முதல் 10 சுமார் 262 ஏக்கருக்கு ஜமீன் ஒழிப்புச் சட்டம் 1948ஆம் வருடத்திய முந்தைய சர்வே ஓ.எஸ்.ஆர். ஆவணங்களின் நகலை, எவ்வித கட்டணமின்றி, 13.5.2010க்குள் வழங்கி, மனுதாரரின் கையொப்பம் பெற்ற நகலையும், மனுதாரருக்கு அளிக்கப்பட்ட தகவல்களின் நகலையும், 17.5.2010க்குள் இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்படுகிறது.
Download
Case No 14922/2009 1948ஆம் வருடத்திய முந்தைய சர்வே ஓ.எஸ்.ஆர். ஆவணங்களின் நகலை வழங்க உத்தரவு

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
