Case No.17421/2022 பட்டா ரத்து செய்யக் கோரிய மனுவின் மீது எடுக்கப்பட்ட முழுமையான தகவல்களை வழங்கவும்,தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாணை கிடைக்கப்பெற்ற 7 தினங்களுக்குள், அலுவலக முத்திரையுடன் கூடிய சான்றொப்பமிட்டு, ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் மனுதாரருக்கு வழங்கி, அதனை அவர் பெற்று ஏற்பளிப்பு செய்ததற்கான ஒப்புகை அட்டையின் நகலினை இவ்வாணையத்திற்கு அனுப்பிவைக்க பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது.
மேலும், மேற்படி ஆணைக்கிணங்க பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்க தவறும் பட்சத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 20(1) மற்றும் 19(8)(b)-ன் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.
Download
Case No.17421/2022 பட்டா ரத்து செய்யக் கோரிய மனுவின் மீது எடுக்கப்பட்ட முழுமையான தகவல்களை வழங்கவும்,தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்