Case No 17572/2008 1948-க்கு முந்தைய நில அளவைப் பதிவேடு கேட்டு மனு
இது குறித்து நகராட்சிப் பொதுத் தகவல் அலுவலர் சம்பந்தப்பட்ட நில அளவை அலுவலர் அவ்வலுவலகத்தில் தகவல்கள் இல்லை என்று தெரிவித்ததன் அடிப்படையில் தகவல்கள் தர இயலாது என்று மனுதாரருக்கு தெரிவித்ததாக தெரிவித்தார். மனுதாரர் கேட்ட ஆவணங்கள் நகராட்சியில் இருந்திருக்க வேண்டும் என்று இவ்வாணையம் முடிவு செய்கிறது. இந்நிலையில் மனுதாரர் கேட்டுள்ள 4 இனங்களுக்கும் தகவல்கள் நகராட்சி அலுவலகத்திலிருந்து அளிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. இது குறித்து கீழ்க்கண்ட ஆணை வழங்கப்படுகிறது.
1) இவ்வாணை கிடைக்கப் பெற்ற நாளிலிருந்து 10 தினங்களுக்குள் மனுதாரருக்கு உரிய தகவல்களை வழங்கி அதன் விவரத்தை இவ்வாணையத்திற்குத் தெரிவிக்குமாறு பொதுத் தகவல் அலுவலர், நகராட்சி ஆணையர் அலுவலகம், அருப்புக்கோட்டை அவர்களுக்கு ஆணையிடப்படுகிறது.
2) நகராட்சியில் தகவல்கள் இருந்திருந்தும் சம்பந்தப்பட்ட நகராட்சி நில அளவை அலுவலரின் கடிதத்தின் அடிப்படையில் மனுதாரருக்கு தகவல் இல்லாமை குறித்து தெரிவித்திருப்பதால் இது குறித்து தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 20(2)-ன் கீழ் உரிய அலுவலர் மீது தகவல் மறுக்கப்பட்டதற்கான நடவடிக்கை எடுத்து அதன் விவரத்தை 2 மாதத்திற்குள் இவ்வாணையத்திற்கு அனுப்புமாறு ஆணையர், நகராட்சி நிர்வாகத் துறை, சேப்பாக்கம், சென்னை-5 கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
