Case No 17828/2009 நிரந்தர கோப்புகள் ஆவணக் காப்பறையில் இல்லை என்று கூறுவது தவறு
கோப்புகள் இருப்பது குறித்து உறுதியாக விசாரணையின் போது பொதுத் தகவல் அலுவலர் சார்பாக வந்திருந்தவரால் தெரிவிக்க இயலவில்லை. விசாரணை முடிவில் கீழ்க்கண்ட ஆணை வழங்கப்படுகிறது.
1) மனுதாரர் கேட்டுள்ள தகவல்களை உரிய கோப்புகளிலிருந்து இவ்வாணை கிடைக்கப்பெற்ற ஒரு வாரத்திற்குள் மனுதாரருக்கு அளித்து அதன் விவரத்தை இவ்வாணையத்திற்குத் தெரிவிக்குமாறு பொதுத் தகவல் அலுவலர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
2) மனுதாரருக்கு சுமார் 8 மாதங்களாக உரிய தகவலை தராமலும், நிரந்தர கோப்புகள் ஆவணக் காப்பறையில் இல்லை என்று தவறான தகவலை தந்ததற்கும், இன்றைய விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பி இருந்தும் வேண்டும் என்றே வேறு கீழ்நிலை அலுவலரை இவ்வாணையத்தின் விசாரணைக்கு அனுப்பியதற்கும் தகவல் உரிமைச் சட்டப் பிரிவு 20(1)-ன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தைப் பொதுத் தகவல் அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம், அருப்புக்கோட்டை அவர்களிடமிருந்து பெற்று ஒரு மாதத்திற்குள் இவ்வாணையத்திற்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர், விருதுநகர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
Download
Case No 17828/2009 நிரந்தர கோப்புகள் ஆவணக் காப்பறையில் இல்லை என்று கூறுவது தவறு

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
