Case No 2121/2009 அ- பதிவேடு, புராதான பதிவேடு F.M.B. வரைபடத்தின் நகல் வழங்க உத்தரவு
மனுதாரர் சம்பந்தப்பட்ட பதிவேட்டின் நகல் தம்மிடம் இருப்பதாகவும், அதற்கு முந்தைய பதிவேட்டின் நகல் தேவை என்றும் தெரிவித்தார். இது குறித்து பொதுத் தகவல் அலுவலரிடம் விசாரித்ததில் மனுதாரர் குறிப்பிடும் பதிவேடு அ- பதிவேடு என்று குறிப்பிடாமல் ” நில உரிமை பதிவேடு ” ( Records of Rights) என்ற பெயரில் இருப்பதாகவும், அப்பதிவேடுகள் மாநில ஆவணக் காப்பகத்தில் பராமரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மனுதாரர் விசாரணையில் தெரிவித்த பதிவேடு இயக்குநர், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை மூலம் ஆவணக் காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்டு மனுதாரருக்கு அளிக்கப்பட வேண்டிய ஆவணமாகும். இந்நிலையில் மனுதாரருக்கு உரிய தகவல் வழங்க வேண்டும் என்ற கருத்தில் கீழ்க்கண்ட ஆணை வழங்கப்படுகிறது.
மனுதாரர் கேட்டுள்ள 1325-ம் பசலிக்கு முந்தைய அ- பதிவேடு (நில உரிமை பதிவேடு), புராதான பதிவேடு மற்றும் புராதான பதிவேட்டின் F.M.B. வரைபடத்தின் நகல் ஆகியவைகளின் நகலை ஆவணக் காப்பகத்திலிருந்து பெற்று ஒரு மாதத்திற்குள் மனுதாரருக்கு அளித்து அதன் விவரத்தை இவ்வாணையத்திற்குத் தெரிவிக்குமாறு பொதுத் தகவல் அலுவலர், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை, சேப்பாக்கம், சென்னை- 5-க்கு ஆணையிடப்படுகிறது. இத்துடன் 23.02.07 நாளிட்ட மனுதாரரின் மனு இணைத்தனுப்பப்படுகிறது.
Download
Case No 2121/2009 அ- பதிவேடு, புராதான பதிவேடு F.M.B. வரைபடத்தின் நகல் வழங்க உத்தரவு

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
