Case No 2477/2009 பயிர் சாகுபடி, கோப்புகளும் 3 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
இன்றைய விசாரணைக்கு மனுதாரர் அழைக்கப்படவில்லை. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் 03.10.2008 அன்று தனி அலுவலர், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, வேலூர் அவர்களிடம் 3 இனங்களில் சில தகவல்களைக் கேட்டு மனுச் செய்துள்ளார். 16.10.2008 அன்று தகவல்கள் தரப்பட்டுள்ளன. முழுமையான தகவல்கள் பெறவில்லையென்று ஆணையத்திற்கு 29.01.2009 அன்று மேல் முறையீடு செய்ததால் 21.08.2009 அன்று வேலூரில் இவ்வழக்கு ஆணையத்தால் விசாரிக்கப்பட்டுள்ளது. திரு ஏழுமலை என்பவர் மனுதாரரின் கணவருக்கு சப்ளை செய்ததாகக் கூறப்படும் கரும்பு விதைக் கரணைக்குக் கூட்டுறவு சர்க்கரை ஆலை திரு ஏழுமலை என்பவருக்குப் பணம் பட்டுவாடா செய்த செலவுச் சீட்டின் நகல் கேட்டு ஆணையத்திற்கு மீண்டும் மனுச் செய்ததால் ஆணையம் இன்று (29.04.2010) மீண்டும் விசாரணை மேற்கொண்டது. 03.10.2008 நாளிட்ட மனுவில் இது குறித்து மனுதாரர் எதுவும் தகவல் கேட்கவில்லை. புதிதாக ஒரு தகவலைக் கேட்கும் போது மீண்டும் புதிதாக மனுச் செய்யும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும் வந்திருந்த பொதுத் தகவல் அலுவலரிடம் இது குறித்து விசாரித்த போது நேரடி பயிர் சாகுபடி கடன் குறித்த விவரங்களும், கோப்புகளும் 3 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லையென்று சர்க்கரைத் துறை ஆணையர் அவர்களின் அலுவலக விதிமுறை என்று கூறினார். அலுவலகக் கோப்புகள் மூலம் அந்த விதியை ஆணையத்திற்கு அவர் அளித்ததால் 1991-ல் வழங்கப்பட்ட கடன் குறித்த கோப்புகள் அலுவலகத்தில் இல்லையென்று பொதுத் தகவல் அலுவலர் கூறியதை ஆணையம் ஏற்றுக்கொண்டு வழக்கினை முடிவு செய்கிறது.
Download
Case No 2477/2009 பயிர் சாகுபடி, கோப்புகளும் 3 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
