Case No.29248/09 ஜமீன் ஒழிப்புச் சட்ட ஆவணங்கள் நிரந்தரப் பதிவேடுகள் ஆகும்
இன்றைய விசாரணைக்கு வந்திருந்த மனுதாரருடைய பிரதிநிதி தன்னுடைய மனுவில் கோரிய 3 நகல்கள் கிடைக்கவில்லையென்று மீண்டும் தெரிவித்தார். பொதுத் தகவல் அலுவலர், மனுதாரர் கோரிய நகல்கள் தமிழ்நாடு ஆவண காப்பகத்திலிருந்து கிடைக்கப் பெறாததால் மனுதாரருக்கு வழங்க இயலாத நிலை உள்ளது என்று தெரிவித்தார். விசாரணையின் முடிவில் இவ்வாணையம் கீழ்க்கண்ட ஆணையை, பிறப்பிக்கிறது :-
1. மனுதாரர் கோரிய 3 நகல்களும் ஒரு மாதத்திற்குள் மனுதாரருக்கு வழங்கப்பட பொதுத் தகவல் அலுவலர் பணிக்கப்படுகிறார்.
2. மனுதாரர் கோரிய 3 நகல்களும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படவில்லை எனில், பொதுத் தகவல் அலுவலர், மனுதாரர் கோரிய 3 நகல்களும் தமிழ்நாடு ஆவண காப்பகத்திற்கு கடிதம் அனுப்பியும் பெறப்படவில்லை அதனால் வழங்க இயலவில்லை என்பதை ரூ.20/- மதிப்புள்ள முத்திரைத் தாளில் (Non Judicial Stamp Paper) வாக்குப் பிரமாணம் ஒன்றை இவ்வாணையத்திற்கு இவ்வாணை கிடைத்த ஆறு வாரங்களுக்குள் அனுப்பி, அதன் நகலை மனுதாரருக்கு வழங்கி, வழங்கிய தகவலின் விபரத்தை இவ்வாணையத்திற்கு சமர்ப்பிக்குமாறு இவ்வாணையம் உத்தரவிடுகிறது.

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
