Case No 30271/2009 1960-ம் ஆண்டுக்குரிய எஸ். எல். ஆர், சிட்டா & அ-பதிவேடுகளை பார்வைக்கு வைக்க உத்தரவு

1) மனுதாரர் கேட்டுக்கொண்டதற்கிணங்க 05.05.2010 அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுத் தகவல் அலுவலர் அறையில் மனுதாரர் தெரிவித்துள்ள எஸ்.எல்.ஆர், புலப்பட நகல், அ-பதிவேடு 1960-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டவை மனுதாரரின் பார்வைக்கு அளிக்குமாறும், மனுதாரர் குறிப்பிட்டு கோரும் ஆவணங்களின் நகல்களை இலவசமாக மனுதாரருக்கு நேரடியாக வழங்கி அதன் விவரத்தை இவ்வாணையத்திற்குத் தெரிவிக்குமாறு பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கன்னியாகுமரி மாவட்டம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
2) மனுதாரர் குறிப்பிட்டு கேட்கும் தகவல்கள் அடங்கிய பக்கங்கள் மட்டும் மத்திய நில அளவை அலுவலகத்தின் மூலம் அனுப்பப்பட்டு ஆவணக் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்களில் இல்லாதது குறித்தும், இதே ஆவணங்கள் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் இல்லாதது குறித்தும் விசாரணை மேற்கொண்டு அது குறித்த அறிக்கையை மனுதாரருக்கும், இரண்டு மாதத்திற்குள் அனுப்புமாறு இவ்வாணையத்திற்கும் ஆணையர், மத்திய நில அளவை அலுவலகம், சென்னை கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

Download

Case No 30271/2009 1960-ம் ஆண்டுக்குரிய எஸ். எல். ஆர், சிட்டா & அ-பதிவேடுகளை பார்வைக்கு வைக்க உத்தரவு

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்