Case No.31431/2009 1954ம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளின் 'அ' பதிவேடு வழங்க உத்தரவு
1. மனுதாரர் கேட்டுள்ள ஆவணங்கள் மத்திய நில அளவை அலுவலகத்திலோ அல்லது ஆவணக் காப்பகத்திலோ இல்லாதது குறித்து உரிய பிரமாண வாக்குமூலத்தை இவ்வாணை பெறப்பட்ட 10 தினங்களுக்குள் அளிக்குமாறு பொதுத் தகவல் அலுவலர், மத்திய நில அளவை அலுவலகம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
2. மனுதாரர் கேட்டுள்ள தகவல்கள் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அல்லது சேலம் மாவட்ட ஆவணக் காப்பகத்தில் உள்ள 1954ம் ஆண்டு மறு நில அளவை செய்த போது வட்ட அலுவலகத்திலிருந்தோ அல்லது கிராம அலுவலகத்திலிருந்தோ பெறப்பட்ட 1954ம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளின் ‘அ’ பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களிலிருந்து மனுதாரருக்கு உரிய தகவலை வழங்குமாறு பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், சேலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
3. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆவணக் காப்பத்திலோ மனுதாரர் கோரும் தகவல்கள் இல்லாத நிலையில் அது குறித்து பிரமாண வாக்குமூலத்தை அளிக்குமாறு பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், சேலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
4. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனுதாரர் கேட்டுள்ள தகவல்கள் இல்லாததது குறித்து பிரமாண வாக்குமூலத்தை இவ்வாணை கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்திற்குள் இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்குமாறு பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், நாமக்கல் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
Download
Case No.31431/2009 1954ம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளின் ‘அ’ பதிவேடு வழங்க உத்தரவு

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
