Case No 3244/2009 மனுதாரர் கோரியுள்ள பட்டா மாற்றம் செய்தது தொடர்பான ஆவணங்களான அ- பதிவேடு, அடங்கல் மற்றும் எஸ்.எல்.ஆர் இலவசமாக வழங்க உத்தரவு
21.08.08 அன்று நில உடமை பதிவு மேம்பாட்டுத் திட்ட அளவையின் ஆவணங்களின் படி சம்பந்தப்பட்ட நபர் பெயரில் குறிப்பிட்ட நிலம் உள்ளதாக தெரிவித்துள்ளார். 30.01.09 அன்ற குறிப்பிட்ட பட்டாவில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். 17.04.09 அன்று மனுதாரருக்கு அ-பதிவேட்டுகளின் நகல்கள் முழுவதும் மனுதாரர் கோரியவாறு நகல்கள் எடுத்து வழங்கப்பட்டுள்ளன. விசாரணையில் மனுதாரர் கேட்டுள்ள பட்டா மாறுதல் குறித்த ஆவணங்கள் இருப்பது குறித்து பொதுத் தகவல் அலுவலரிடம் விசாரிக்கப்பட்டது. பொதுத் தகவல் அலுவலர் அவ்வலுவலகத்தில் 1984-க்கு பிறகு உள்ள பதிவேடுகள் உள்ளதாகவும், அப்பதிவேடுகளில் மனுதாரர் குறிப்பிட்டுள்ள நபர் பெயரில் பட்டா உள்ளதாகவும் தெரிவித்தார். மனுதாரர் குறிப்பிட்ட நபருக்கு பட்டா மாறுதல் செய்த ஆவணங்களின் நகல் கேட்டிருப்பதால் அக்குறிப்பிட்ட ஆவணங்கள் இருப்பது குறித்து பொதுத் தகவல் அலுவலரிடம் விரிவாக விசாரிக்கப்பட்டது. மனுதாரர் கேட்டுள்ள ஆவணங்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இல்லை என்றாலும், அவைகள் 1984-க் முந்தைய ஆவணங்கள் என்று இவ்வாணையம் கருதுகிறது. ஆகவே பொதுத் தகவல் அலுவலர் கூற்றுப்படி அது தொடர்புடைய ஆவணங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. உதவி இயக்குநர் (நில அளவை) அவர்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டு பராமரிக்கப்படும் ஆவணமாக கருதப்படுகிறது. அதில் மனுதாரர் கோரும் தகவல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் பதிவேடுகளில் இருப்பதாக கருதப்பட்டு கீழ்க்கண்ட ஆணை வழங்கப்படுகிறது. மனுதாரர் கோரியுள்ள குறிப்பிட்ட நபரின் பெயரில் பட்டா மாற்றம் செய்தது தொடர்பான ஆவணங்களான அ- பதிவேடு, அடங்கல் மற்றும் எஸ்.எல்.ஆர் ( Supplementary Land Register ), ஆகியவைகளிலிருந்து உரிய நகல்களை மனுதாரருக்கு இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் இலவசமாக அளித்து அதன் விவரத்தை இவ்வாணையத்திற்குத் தெரிவிக்குமாறு உதவி இயக்குநர் (நில அளவை), விருதுநகர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
Download
Case No 3244/2009 மனுதாரர் கோரியுள்ள பட்டா மாற்றம் செய்தது தொடர்பான ஆவணங்களான அ- பதிவேடு, அடங்கல் மற்றும் எஸ்.எல்.ஆர் இலவசமாக வழங்க உத்தரவு

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
