Case No.32444/09 1927-ஆம் ஆண்டுக்கான பதிவேடுகள் சம்பந்தப்பட்ட நில அளவைப் பதிவேடுகள் துறையில் இருந்திருக்க வேண்டும்
1970 மற்றும் 2002-ஆம் ஆண்டு பதிவேடுகள் மட்டும் உள்ளதால் அதன் அடிப்படையில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. மனுதாரர் கேட்டுள்ள 1927-ஆம் ஆண்டுக்கான பதிவேடுகள் சம்பந்தப்பட்ட நில அளவைப் பதிவேடுகள் துறையில் இருந்திருக்க வேண்டும் என்று இவ்வாணையம் முடிவு செய்து விசாரணை முடிவில் கீழ்க்கண்ட ஆணை வழங்குகிறது.
1) மனுதாரர் கேட்டுள்ள தகவலை இவ்வாணை கிடைக்கப்பெற்ற ஒரு வாரத்திற்குள் மனுதாரருக்கு அவ்வலுவலகத்திலிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்தோ அல்லது மாவட்ட ஆவணக் காப்பகத்திலிருந்தோ பெற்று மனுதாரருக்கு இலவசமாக அளித்து அதன் விவரத்தை இவ்வாணையத்திற்குத் தெரிவிக்குமாறு பொதுத் தகவல் அலுவலர், நில அளவைப் பதிவேடுகள் துறை, திருச்சி கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
2) மனுதாரரின் மனுவிற்கு உரிய தகவலை அனுப்பாமலும், சம்பந்தப்பட்ட பதிவேடுகள் இல்லாத திருச்சி மாநகராட்சி உதவி ஆணையருக்கு மனுதாரரின் மனு தகவல் தர அனு அனுப்பியதையும், மனுதாரருக்கு தகவல் தர மறுத்ததாக கருதப்பட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 20(1)-ன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தைப் பொதுத் தகவல் அலுவலர், உதவி இயக்குநர், நில அளவைப் பதிவேடுகள் துறை, திருச்சி அவர்களிடமிருந்து பெற்று ஒரு மாதத்திற்குள் இவ்வாணையத்திற்கு அனுப்புமாறு ஆணையர், நில அளவைப் பதிவேடுகள் துறை, சென்னை கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
Download
Case No.32444/09 1927-ஆம் ஆண்டுக்கான பதிவேடுகள் சம்பந்தப்பட்ட நில அளவைப் பதிவேடுகள் துறையில் இருந்திருக்க வேண்டும்

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
