Case No 330/2009 200 ஆண்டுகளுக்கு முந்தைய (நிரந்தர) ஆவணங்கள் இல்லை என்றால், 3 PIO-களும் தனித்தனியாக, பிரமான வாக்குமூலம் அளிக்க வேண்டும்
மனுதாரரின் மனுக்கள் அனைத்து வழக்குக் கோப்புகளைப் பரிசீலித்த போது, துறைகளுக்கும் சென்றுள்ளமையை கோப்புகள் உணர்த்துகின்றன. மனுதாரர் கேட்டுள்ள,
(1) கிராம நிரந்தர நிலவரித் திட்ட பதிவேடுகளின் நகல்கள்
(2) 1802ஆம் ஆண்டிற்குரிய கிராம செட்டில்மெண்ட், நில அளவைப் பதிவேடுகளின் நகல்கள்
(3) 1885 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நில அளவின் படி உருவாக்கப்பட்ட ‘ அ ‘ பதிவேடு நகல்கள்
(4) 1905 ஆம் ஆண்டு மறு நில அளவின்படி உருவாக்கப்பட்ட கிராம செட்டில்மெண்ட் ‘ அ’ பதிவேடு நகல்கள் ஆகிய அனைத்தும் நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள் என்று மனுதாரர் கூறியுள்ளார். ஆனாலும், மேற்கண்ட பதிவேடுகள் 200 ஆண்டுகளுக்கு முந்தையவை என்ற காரணத்தால், பல முறை முயன்றும், அந்தப் பதிவேடுகள் தங்கள் அலுவலகத்தில் கிடைக்கப் பெறவில்லை என்று இன்றைய விசாரணைக்கு வந்திருந்த மூன்று பொதுத் தகவல் அலுவலர்களும் தெரிவிக்கும் நிலையில், கீழ்க்கண்ட ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
இவ்வாணை கிடைக்கப் பெற்ற இரண்டு வாரங்களுக்குள், மனுதாரர் கோரியுள்ள ஆவணங்களைத் தேடிப் பார்த்து, மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் கிடைக்கப் பெறவில்லை என்றால், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பொதுத் தகவல் அலுவலர்களும் தனித்தனியாக, மனுதாரர் கோரும் மேற்படி ஆவணங்கள் தங்கள் அலுவலகங்களில் இல்லை என்பதை எழுத்துப்பூர்வமான பிரமாண வாக்குமூலமாக இந்த ஆணையத்திற்கு அளித்திட வேண்டும் என்று ஆணையிடப்படுகிறது.
Download
Case No 330/2009 200 ஆண்டுகளுக்கு முந்தைய (நிரந்தர) ஆவணங்கள் இல்லை என்றால், 3 PIO-களும் தனித்தனியாக, பிரமான வாக்குமூலம் அளிக்க வேண்டும்

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
