Case No 37172/2008 1968 சார்ந்த அரசாங்க ஆவணம் அலுவலகத்தில் இல்லையென்றால் பிரமாண வாக்குப் பத்திரம் மூலம் உறுதி செய்ய வேண்டும்
மனுதாரர் கோவை உள்ளூர் திட்டப் பகுதி, கோவை மாநகராட்சி, சௌரிபாளையம் கிராமம் 35/68 மனைப் பிரிவு குறித்துச் சில தகவல்களைக் கேட்டிருக்கின்றார். மனுதாரர் கேட்கின்ற ஆவணங்கள் மிகவும் பழமையானது என்றும், 1968-ஐச் சார்ந்த ஆவணங்கள் தங்கள் அலுவலகத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லையென்றும் பொதுத் தகவல் அலுவலர் கூறினார். சில தகவல்கள் மாநகராட்சிக்குத் தொடர்பானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் கேட்ட கேள்விக்குப் போதுமான தகவல்கள் தரப்பட்டுள்ளன என்று ஆணையம் கருதுகிறது. இந்நிலையில் கீழ்க்கண்ட ஆணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாணை பெறப்பட்ட ஒரு வாரத்திற்குள் விடுபட்ட இனங்களான 4,5,6,7,8 இவற்றிற்கு உரிய தகவல்களை உடனடியாக மனுதாரருக்கு அளித்து ஆவணங்களின் நகல்கல் இருந்தால் அவற்றையும் அளித்து மனுதாரரிடம் ஒப்புகைப் பெற்று விவரத்தை ஆணையத்திற்குத் தெரிவிக்கும்படி பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையிடப்படுகிறது. மனுதாரர் கேட்டுள்ள 1968-ஐச் சார்ந்த அரசாங்க ஆவணம் அலுவலகத்தில் இல்லையென்றால் அதனைப் பிரமாண வாக்குப் பத்திரம் மூலம் உறுதி செய்ய வேண்டுமென்று பொதுத் தகவல் அலுவலர் பணிக்கப்படுகிறார்.
Download
Case No 37172/2008 1968 சார்ந்த அரசாங்க ஆவணம் அலுவலகத்தில் இல்லையென்றால் பிரமாண வாக்குப் பத்திரம் மூலம் உறுதி செய்ய வேண்டும்

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
