Case No 38185/2008 1914-ஆம் ஆண்டு சான்றிட்ட பிறப்பு சான்றிதழின் மூன்று நகலை மனுதாரருக்கு வழங்க உத்தரவு
பொதுத் தகவல் அலுவலர் ஆவணங்கள் உரிய நிலையில் இல்லாததாலும், பழுதடைந்து உள்ளதாகவும் ஆவணங்கள் 95 வருடங்கள் ஆன நிலையில் சம்பந்தப்பட்ட பிறப்பு சான்றிதழின் மூல நகல் இல்லை எனவும் கொடுக்கப்பட்ட நகலை கொண்டு சான்றிட்ட பிறப்பு சான்றிதழ் மனுதாரரின் மனைவிக்கு தரப்பட்டுள்ளது. அதன் நகலையே மனுதாரர் விசாரணையில் வேண்டும் என்று தெரிவித்தார். விசாரணை முடிவில் கீழ்கண்டவாறு ஆணையிடப்படுகிறது.
1) மனுதாரருக்கு சான்றிட்ட பிறப்பு சான்றிதழின் மூன்று நகலை மனுதாரருக்கு இவ்வாணை கிடைக்கப்பெற்ற 10 தினங்களுக்குள் அளித்து அதன் விவரத்தை இவ்வாணையத்திற்கு தெரிவிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையிடப்படுகிறது.
2) இன்றைய விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பியிருந்தும் விசாரணைக்கு வராத பொதுத் தகவல் அலுவலர் வராததிற்கான காரணத்தை இவ்வாணை கிடைக்கப்பெற்ற ஒரு மாதத்திற்குள் பொதுத் தகவல்
அலுவலரிடமிருந்து பெற்று இவ்வாணையத்திற்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சித்தலைவர், நாகப்பட்டினம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
Download
Case No 38185/2008 1914-ஆம் ஆண்டு சான்றிட்ட பிறப்பு சான்றிதழின் மூன்று நகலை மனுதாரருக்கு வழங்க உத்தரவு

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
