Case No.40068/2014 காலமுதிர்ச்சியால் ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்று தெரிவித்ததை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

சட்டப்பிரிவு 20(1)ன் கீழ் அதிகபட்ச தண்டமாக ரூ.25,000/- ஏன் விதிக்கக்கூடாது என்பதற்கும், தொடர்ந்து மனுதாரருக்கு முழுமையான தகவலை வழங்க மறுத்தமைக்காக சட்டப்பிரிவு 20(2)ன் கீழ் சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அவர்களுடைய உயரதிகாரிக்கு ஏன் பரிந்துரைக்கக்கூடாது என்பதற்கும், அவர்களுடைய எழுத்துமூலமான விளக்கங்களை இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்க அவர்களுக்கு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

2. மனுதாரரின் முதல் மேல்முறையீட்டை 01.10.14 அன்று பெற்றுக் கொண்ட பின்பும், மேல்முறையீட்டு அதிகாரியான துணை வட்டாட்சியர், திருக்கோவிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் அவர்கள் சட்டப்பிரிவு 19(1)ல் சொல்லப்பட்ட மேல்முறையீடு நடைமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காமலும், சட்டப்பிரிவு 19(6)ன் கீழான தமது கடமையை சரிவர ஆற்றத் தவறியுள்ளதாலும், அவர் மீது அவருடைய உயரதிகாரிக்கு ஏன் அறிக்கை அனுப்பக்கூடாது என்பதற்கு அவருடைய எழுத்துமூலமான விளக்கத்தை இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்க இதன்மூலம் அவருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
3. மனுதாரருக்குப் பொதுத் தகவல் அலுவலரும் முதல் மேல்முறையீட்டு அதிகாரியும் தொடர்ந்து 7 மாதகாலமாக தகவல் வழங்க மறுத்து வரும் காரணத்தால், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விழுப்புரம் மாவட்டம் அவர்கள் சம்பந்தப்பட்ட திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மனுதாரர் கோரும் தகவல் அடங்கிய ஆவணங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 18(3)(b)ன் கீழ் தேடிக் கண்டுபிடித்து ஆய்வு செய்து மனுதாரர் கோரும் விடுபட்ட இனங்களுக்கான தகவலை இவ்வாணைகள் கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக்குள் வழங்கி அதனை அவர் பெற்று ஏற்பளிப்பு செய்த விபர அறிக்கையை இவ்வாணையத்திற்கு அனுப்பிவைக்க அவருக்கு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

Download

Case No.40068/2014 காலமுதிர்ச்சியால் ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்று தெரிவித்ததை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்