Case No.7944/2018 ஆவணத்தின் பராமரிப்பு காலம் மூன்று ஆண்டுகள் கடித நகல் மற்றும் Minutes of the meeting ஆகியவை வழங்கப்படவேண்டுமென்று முடிவு

பொதுத் தகவல் அலுவலரால் ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்த ஆவணங்களைப் பரிசீலனை செய்கையில், மேல்முறையீட்டாளர் கோரியுள்ள தகவலடங்கிய ஆவணத்தின் பராமரிப்பு காலம் மூன்று ஆண்டுகள் என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, கூடுதல் செயலர் அவர்களால் நடத்தப்பட்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதென்பது தெரிய வருகிறது. மேற்படி கடித (எண்.58841/E1/2005-4, நாள்.21.07.2008) நகல் மற்றும் Minutes of the meeting ஆகியவை மேல்முறையீட்டாளருக்கு வழங்கப்படவேண்டுமென்று ஆணையம் முடிவு செய்து விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட உத்திரவு பிறப்பிக்கப்படுகின்றது:
அரசு கடித (எண்.58841/E1/2005-4, நாள்.21.07.2008) நகல் மற்றும் Minutes of the meeting ஆகியவற்றை இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 7(6)-ன்கீழ் கட்டணம் ஏதுமின்றி ஒப்புகை அட்டையுடன்கூடிய பதிவஞ்சலில் மேல்முறையீட்டாளருக்கு அனுப்பி, அதனை அவர் பெற்று ஏற்பளிப்பு செய்த விபரத்தை விபரத்தை அறிக்கையாக இவ்வாணை கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக்குள் ஆணையத்திற்குச் சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடப்பட்டு, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு செய்து இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

Download

Case No.7944/2018 ஆவணத்தின் பராமரிப்பு காலம் மூன்று ஆண்டுகள் கடித நகல் மற்றும் Minutes of the meeting ஆகியவை வழங்கப்படவேண்டுமென்று முடிவு

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்