Case No 30729/2008 மனுதாரர் கோரிய ஆவணங்கள் அலுவலகத்தைச் சார்ந்திருக்கும் பட்சத்தில் பொது ஆவணங்களாகவே கருதப்பட வேண்டும்
2. தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப் பிரிவு 6(1)ன் கீழ் மனுதாரர், 4.6.2008 அன்று துாத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திரு ப. ஜெயராமன் அவர்கள் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2007-08ஆம் ஆண்டிற்கான வருமான வரி அறிக்கை அதன் இணைப்புகளுடன் நகல் வழங்கக் கோரி துாத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தின் பொதுத் தகவல் அலுவலரிடம் மனு செய்திருந்தார். பொதுத் தகவல் அலுவலர் 7.7.2008 அன்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8(1)ன்படி வழங்க இயலாது என்று மனுதாரருக்குத் தெரிவித்துள்ளார். பொதுத் தகவல் அலுவலர் வழங்கிய தகவல்கள் சரியில்லையென்று கருதி 19.7.2008 அன்று சட்டப் பிரிவு 19(1)ன் கீழ் துாத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு முதல் மேல்முறையீடும், சட்டப் பிரிவு 19(3)ன் கீழ் 11.9.2008 அன்று இவ்வாணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடும் செய்ததன் அடிப்படையில், இன்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
3.இன்றைய விசாரணையின்போது, மனுதாரர் கோரிய தகவல்கள் தனிப்பட்டவரின் அறிக்கையினை பிறர் கோருவது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின், சட்டப் பிரிவு 8(1)ன்படி தனிப்பட்டவரின் அந்தரங்கத்தில் விரும்பத்தகாது நுழைவதாக இருக்குமென்று கருதி, அதனை வழங்க இயலாது என்று தெரிவித்தாக பொதுத் தகவல் அலுவலர் கூறினார். மனுதாரர் கோரிய ஆவணங்கள் அலுவலகத்தைச் சார்ந்திருக்கும் பட்சத்தில் அவை பொது ஆவணங்களாகவே கருதப்பட வேண்டும். இந்நிலையில், பொதுத் தகவல் அலுவலர் மனுதாரர் கோரிய தகவல்களை வழங்க மறுப்பது சரியில்லை என்றும், 2005ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8(1) இதற்குப் பொருந்தாது என்றும், ஆணையம் கருதுகிறது. இந்நிலையில், பொதுத் தகவல் அலுவலர் மனுதாரர் கோரிய மேற்கூறிய ஆவணங்களின் நகலை 19.6.2009க்குள் அளித்து, மனுதாரரின் கையொப்பம் பெற்ற நகலை 26.6.2009க்குள் இவ்வாணையத்திற்கு அனுப்பிவைக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு இவ்வாணையம் உத்தரவிடுகிறது.
Download
Case No 30729/2008 மனுதாரர் கோரிய ஆவணங்கள் அலுவலகத்தைச் சார்ந்திருக்கும் பட்சத்தில் பொது ஆவணங்களாகவே கருதப்பட வேண்டும்

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
